புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், போதைப் பாவனையை தடுக்கும் வகையிலும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது, 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.