Author: ampalam

நாடு முழுவதிலும் பொலிஸ்மா அதிபரின் பணிப்பின் கீழ் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகர் ஜெகத் நிஷாந்தவின் வழிகாட்டுதலில் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் கீழ் நேற்று இரவு யாழ்ப்பாண நகர பகுதியில் பொலிசாரால் விசேட போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதி மற்றும் யாழ்ப்பாண நகர்ப்பகுதி வர்த்தக நிலையங்களிலும் யாழ்ப்பாண பொலிசாரினால் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்றையதினம் சாதனையாளர்கள் கோரவிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபை தலைவர் தங்கராசா பார்த்தீபன் தலமையில் மாலை 3:00 மணியளவில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பிரதம குரு செந்தூர குருக்கள் பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவாகிய சந்திரகுமார் லக்சனா, சிறீதரன் தனுசியா, அழகராசா கபிலன் ஆகியோருக்கும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்த யா.அம்பன் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் சாந்தரூபன் சாருஜன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். குறித்த சாதனையாளர்கள் கௌரவிப்பில் ஆலய பிரதம குரு சரந்தூரக்குருக்கள் அவர்களுடன் கிராமத்தின் மூத்த பிரஜைகளான க.தில்லையம்பலம், செ.நவரத்தினம், வி.அருந்தவராசா, கா.சுரேந்திரராசா மற்றும் கொட்டோடை அண்ணாமார் ஆலய அர்ச்சகர் க.பத்தமநாதன் ஆகியோரும் இணைந்திருந்தனர். இந்நிகழ்வுகளில் கொட்டோடை பிள்ளையார் ஆலய பக்த அடியார்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி அல்லது VAT 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் மது போத்தல் ஒன்றின் விலை 90 முதல் 150 ரூபா வரை அதிகரிக்குமென மதுபான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எத்தனால், வெற்று மதுபான போத்தல்கள், மதுபான லேபிள்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மதுபானம் அடங்கிய போத்தல்கள் மீதான VAT வரியைச் சேர்த்தமையே இதற்குக் காரணம் என நிறுவனங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன்படி, தற்போதைய விற்பனை விலையான 3260 ரூபாவைக் கொண்ட விஷேட வகை (கல்) மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Read More

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை நிலைமை இன்று (26) அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதற்கமைய, கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்துடன், மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை…

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது சூழலை நுளம்புகள் பரவாத வகையில் பாதுகாக்க வேண்டும் எனயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்தார். டிசம்பர் மாதத்தில் இதுவரை 945 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன் நேற்றைய தினம் 40 டெங்கு நோயாளிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் விடுதி டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் உடல்நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும். யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் தங்கள் சார்ந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஒருவருக்கு காய்ச்சல் எற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடுவது சால சிறந்தது என்றார். நேற்றையதினம் குழந்தையொன்று டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கயிலேயே குறித்த மாணவியின் சகோதரி இவ்வாறு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கச்சிக்கு உடல் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மருத்துவர் பார்வையிடுவதற்கு வரும்போது வாந்தி காணப்பட்டதால் அதற்கு ஒரு ஊசி போடுமாறு தாதியருக்கு கூறினார். இந்நிலையில்…

Read More

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்துக்கு சீரான போக்குவரத்துக்கு வசதிகளை செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு நோக்கி இன்று மாலை சேவையை ஆரம்பித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து கைதடி பகுதியில் பழுதடைந்து நிற்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து மாலை 5.15 மணிக்கு கட்டைக்காடு பிரதேசத்துக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் கைதடி சித்த வைத்தியசாலைக்கு முன் பழுதடைந்து மேற்கொண்டு பயணிக்கமுடியாமல் நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் கட்டைக்காடு சுமார் 70 கிலோமீற்றர் தூரத்தைக்கொண்டது.இவ்வாறான தூர பிரதேசத்துக்கு நல்ல நிலையில் உள்ள பேருந்தை விடாமல் மிகவும் பழுதான பேருந்து சேவையில் ஈடுபடுவதாக நாளாந்தம் பயணம் செய்யும் பயணிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக வடமராட்சி கிழக்குக்கான இ.போ.ச.பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆகவே இது தொடர்பில் உரிய தரப்புக்கள், அரசியல்…

Read More

வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் நிதி அனுசரணையில் கரவெட்டி ஒன்றிணைந்த இளைஞர் அமைப்பினால் ஒளி கொடுப்போம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 4:30 மணியளவில் கரவெட்டி கிழவி தோட்டம் சன சமூக நிலைய மண்டபத்தில் கரவெட்டி ஒன்றிணைந்து இளைஞர்கள் அமைப்பின் தலைவர் தலமையில் இடம் பெற்றது. இதில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாண சபை தலைவர் சந்திரலிங்கம் சுகிர்தன் கலந்துகொண்டு மூக்குக் கண்ணாடிகளை வழங்கிவைத்தார். அண்மையில் கரவெட்டியில் இடம் பெற்ற அமரர் சிவ சிதம்பரம் அவர்களது நூற்றாண்டு விழாவிற்க்காக நடாத்தப்பட்ட மருந்து முகாமில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 21 பேருக்கே இவ்வாறு கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Read More

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் எந்த முடிவை எடுக்கக் கூடாது என ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்க வேண்டும் என நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார் மொட்டு அரசாங்கத்தை விமர்சித்து அதே அரசாங்கத்தில் தற்போது அமைச்சராக இருக்கும் ஹரீன் பெர்ணான்டோ அவர்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சரரே நீங்கள் தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக நீங்களும் உங்கள் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவும் தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என கூறமுடியுமா? நல்லாட்சியில் நடாத்திய நாடகத்தை தமிழ் மக்கள் இன்னும் மறந்து விட வில்லை. ரணில் விக்கிரமசிங்காவை ஆதரிக்க வேண்டும் என கோருவதற்கு முன்பாக ஜனாதிபதி மூலம் தமிழர்கள் எதிர்பார்க்கும் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுத்திருந்தால் உங்கள் மீது நாம்…

Read More

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் “மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தம்மை எதிர்ப்பவர்களையும், தமக்கு இடையூறு செய்வோரையும் மன்னித்து அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் போக்கிக்கொள்ளுமாறு கிறிஸ்தவ மதம் நமக்கு கற்பிக்கிறது. மேலும் பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்துடன் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் எனவும் அவர்குறிப்பிட்டார்.

Read More