Author: ampalam
மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் காலமானார். கடந்த மாதம் 18 ஆம் தேதி நுரையீரலில் சளி மற்றும் இருமல் தொந்தரவு காரணமாக நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் தேறிய நிலையில், கடந்த 11 ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதற்கிடையில் விஜயகாந்த் நேற்று முன்தினம் இரவு மீண்டும் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று தெரிவித்தது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தே.மு.தி.க. தலைமை அலுவலகம் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனை முன்பு போலீஸ்…
வவுனியாவில் இருந்து 2023ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக 537 பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு வீட்டு பணியாளர்களாக சென்றுள்ளதாக வவுனியா மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாவட்ட இணைப்பாளர் சி. கிருஸ்ணகுமார் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னரான காலப்பகுதியில் அதிகளவான ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டு பணியாளர்கள், தொழிலாளர்களாக சவுதி, கட்டார், குவைத் உட்பட மத்திய கிழக்கு நாடுகளிற்கு மாதம் 175 பேர் வரை பயணமாகின்றனர். இதில் 90 வீதமானவர்கள் பயிற்சி அற்ற தொழிலாளர்களாகவே செல்கின்றனர். மேலும் கடந்த 2022ம் ஆண்டில் தொழிலாளர்களாக இலங்கையில் இருந்து 311,263 பேர் வரை சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமல் பெருமளவு எண்ணிக்கையானோர் தொழிலாளர்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
பிள்ளையார் ஆலயத்தில் தேவாரம் ஓதிக் கொண்டிருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுக்காலை நடந்துள்ளது. வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சி.இராசரத்தினம் (வயது-88) என்பவரே உயிரிழந்தவராவார். ஆலயத்துக்குத் தினமும் சென்று தேவா ரம் ஓதும் இவர், நேற்றும் வழமை போன்று ஆலயத்துக்குச்சென்றுள்ளார். ஒலிவாங்கியில் தேவாரம் ஓதிக்கொண்டி ருந்தபோது திடீரென அவர் மயங்கிச் சரிந்துள்ளார். உடனடியாக வல்வெட்டித் துறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர் கள் உறுதிப்படுத்தினர்.
சமூக வலைத்தளங்களின் மூலம் யாழ்ப் பாணத்தில் சுமார் 26 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு முறைப்பாடுகள் பாதிக்கப்பட்டவர்களால் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. இணையம் மூலம் முதலீடு செய்து பணம் ஈட்டலாம் என்று ஆசையூட்டப்பட்டே இந்த மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக வலைத்தளங்கள் மூலமே இந்தத் தொடர்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு ஏமாற்றப்பட்ட இருவர் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவர் சுமார் 20 லட்சம் ரூபாவையும், மற் றையவர் சுமார் 6 லட்சம் ரூபாவையும் இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்ப டுகின்றது. சமூகவலைத்தளங்கள் மூலம் மேற் கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்ப வத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர், முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன் துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல் வெட்டித்துறை பொலிஸா ரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோன சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் முற்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் இருவர் பிணையில் விடுவிக்கப் பட்ட தோடு ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி…
கடல் வாழ்க்கை நில வாழ்க்கையைவிடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரணபயத்தை அறவே இல்லாததாக்கியது. சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும் அலைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் பயணம் பெரும் பயிற்சியாக அமைந்து உடலையும் மனதையும் வலுவாக்கியது. நிச்சயமற்ற வருவாய் பொருள் இழப்புக் குறித்த கவலையை இல்லாமல் ஒழித்தது. இக்கடல்சார் பாரம்பரிய குணவியல்புகளுடன் இலட்சிய உறுதியும் சேர்ந்து தலைவர் பிரபாகரனுக்குப் பேராண்மையைப் பெற்றுத் தந்தது. அவரால் கடலையும் நிலத்தையும் குறிப்பிட்ட காலம் வரையிலேனும் கட்டிக்காக்க முடிந்தது. இன்று அவர் இல்லாத நிலையில் சூறையாடப்படும் கடலைப் பாதுகாக்கவேண்டிய பெரும் பொறுப்பு நெய்தல் நில மக்களிடமே உள்ளது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் கடற்கோள் நினைவுநாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை (26.12.2023) மாதகல் விநாயகர் இறங்குதுறையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ. ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,…
வடக்கு கிழக்கு எங்கிலும் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் பாண்டியன்குளம், மற்றும் துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் விவசாயிகளின் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. வவுனிக்குள நீர்ப்பாசன திட்டத்தின் கீழான பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் வெள்ளத்திற்கு முதல் மடிச்சு கட்டி மற்றும் கபிலநிற தத்தி போன்ற நோய்களின் தாக்கங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் , அவற்றிலிருந்து காப்பாற்றி வயல்நிலங்களை பராமரித்த போதும் வெள்ளத்தினால் தற்போது அவை அழிவடைந்திருப்பதாகவும், இந்த அரசாங்கம் தமக்கான இழப்பீட்டினை தந்துதவினால் மேலும் தாங்கள் விவசாயத்தினை மேற்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறை துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பகுதிகளில் 14590 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மையினை செய்து வருகின்றனர். இதேவேளை துணுக்காய் கமநல சேவை நிலையத்திற்குற்பட்ட பகுதிகளில் இம்முறை 7840 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் வேளாண்மையினை செய்கின்ற இதே வேளை 2300 ஏக்கர்…
வட்டுக்கோட்டை – அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில், வீதியோரத்தில் கொட்டப்பட்டுள்ள பொருட்களால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. குறித்த இடத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கொள்கலன்கள் என பல பொருட்கள் கொட்டப்பட்டுள்ளள்ளன. அத்துடன் சூழலுக்கு தீங்கான மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளன. இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளால் சூழல் மாசடைவதுடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயமும் காணப்படுகிறது. இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையில் தனியார் கல்வி நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. ஆகையால் இந்த பகுதியில் உருவாகும் நுளம்பானது மாணவர்களை கடிக்கும் அபாயம் காணப்படுகின்றது. சுகாதார தரப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையினர் அன்றாடம் இந்த வீதியால் பயணித்து வருகின்றனர். ஆனால் இவற்றினை கவனிப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும் வேறு இடங்களிலும் சுகாதாரத்தை கடைப்பிடிக்குமாறு கூறி, டெங்கு அபாயம் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் உத்தியோகத்தர்கள் இவற்றினை கண்டும் காணாதது போல் செல்வது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு…
யாழ்ப்பாண நகர்பகுதியில் பெரிய கடை வீதியில் உள்ள இரண்டு கடைகள் நேற்று இரவு (27) தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது கடையில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களை சிங்களவர்களிடம் இருந்து தமிழர்கள் பறிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இனவாத பித்தலாட்டத்தை ஊடகங்களில் கட்டவிழ்த்து விட்டுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிங்கள மக்களை ஏமாற்றி தமிழர் மீது இனவாதத்தை வீசி தன்னுடைய அரசியல் பிழைப்பை நடத்தும் வீரசேகர இலங்கைத்தீவு ஈழம் என்ற பெயரில் தமிழர்களால் ஆளப்பட்டிருக்கும் போது கள்ளத் தோணியில் வந்து குடியேறிய விஜயனின் பரம்பரை என்பதை இடை இடையே மறந்து விடுகிறார். பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க சொன்னது போல சரத் வீரசேகரவின் மூளையை பரிசோதிக்க வேண்டும். பிரித்தானியரின் காலணித்துவ ஆட்சியில் நிர்வாக இலகுவாக்கலுக்காக தமிழர் தேசம் ஏனைய நிர்வாக அலகுகளுடன் இணைத்து ஒரே அலகாக கோல்புறுக் அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டமையே தமிழரின் சுயாட்சி நசுக்கப்பட காரணமானது. பின்னர்…