மன்னார் பொது வைத்தியசாலையில் 2024 ஆண்டுக்கான வருடாந்தர பொது ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் நத்தார் கொண்டாட்ட நிகழ்வும் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் யோகேஸ்வரன் தலைமையின் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைத்திய சாலை பொது மண்டபத்தில் இடம் பெற்றது.
வைத்தியசாலை சூழலை இனக்கப்பாட்டுடனும் சுகாதார ஊழியர்களை மன அமைதியுடனும் மத நல்லிணக்கத்துடனும் வைத்திருக்கும் முகமாக வைத்திய சாலை நலன்புரி சங்கம் மற்றும் சுகாதார தொழில் சங்கங்களின் கட்டமைப்பு இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் , சிறப்பு விருந்தினர்களாக மகபேற்றியல் வைத்திய நிபுணர் பாபு , அருட்தந்தை ஜேம்ஸ் ஜெனிஸ்ரன், வைத்திய சாலை நிர்வாக உத்தியோகஸ்தர் சிவயோகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் வைத்திய சாலை உத்தியோகஸ்தர்கள், பணியாளர்கள், மற்றும் சுகாதார ஊழியர்களால் பல்வேறு கலை நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றதுடன் கலை நிகழ்வுகளை சிறப்பாக மேற்கொண்டவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அதே நேரம் வைத்திய சாலையில் அர்பணிப்புடன் பணியாற்றும் சுத்திகரிப்பு பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு புத்தாண்டு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.