Author: ampalam

யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார்விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நத்தார் விசேட திருப்பலியில் யாழ் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் ,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More

திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கபடும் வருடாந்த பாத யாத்திரை 11வது வருடமாக இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியுடன் நேற்று இடம்பெற்றது. காலை 7 மணியளவில் மாதகல் சம்பில்தறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமான பாதயாத்திரை பல ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்த வண்ணம் பொன்னாலை சந்தியினை சென்றடைந்தது .வருடா வருடம் பாதயாத்திரையை முன்னிட்டு பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினால் சிவனடியார்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக காரைநகர் ஆலயங்களை தரிசித்த வண்ணம் காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை மாலை சென்றடைந்து அடியார்கள் திருவெம்பாவை பூஜையில் கலந்து கொண்டனர்.பாதயாத்திரை இடம்பெற்ற வழித்தடத்தில் பொதுமக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்பொழுது அகில இலங்கை சைவ மகா சபையினர், சிவ தொண்டர்கள், சிவ மங்கையர்கள் ,சிவனடியார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றய நிலவரப்படி 130 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு டெங்கு காய்ச்சல் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்புக்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றன.

Read More

வவுனியா பூந்தோட்டம் பொதுச்சந்தையில் கோழிக்கழிவுகளை சிலர் கொட்டுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது. வவுனியா நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பூந்தோட்டம் பொதுச்சந்தை கடந்த சிலமாதங்களாக இயங்காத நிலையில் உரிய பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில் அண்மைய நாட்களாக பொதுச்சந்தை வளாகத்தில் கோழி இறைச்சியின் கழிவுகளை குறித்த சிலர் வீசிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாரசீர்கேடான நிலைமை உருவாகியுள்ளது. வீசப்படும் கழிவுகளை மிருகங்கள் பறவைகள் காவிச்செல்வதால் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசும் நிலையும் காணப்படுகின்றது. எனவே குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை கவனம் செலுத்தி கழிவுகளை வீசுவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுப்பதுடன் சந்தையினை புனரமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பூந்தோட்டம் பொதுச்சந்தை நீண்ட காலமாக இயங்காத நிலையில் அதற்கு அண்மையில் பல தனியார்இறைச்சி விற்பனை நிலையங்கள் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் 19 ஆயிரத்து ஐநூறு மில்லிலீட்டர் கசிப்புடன் 34 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டில் சுன்னாகம் பொலிஸார் நேற்றயதினம் (24) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழக்கூடிய இலங்கை தீவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைவஸ்து வியாபாரத்திலும் பாவனையிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரமாக இலங்கையில் போதைவஸ்துக்களை ஒழிப்பதற்காக பொலிசார், இராணுவம், அதிரடிப்படை மற்றும் முக்கியமான அமைப்புகளால் முழு இலங்கையிலும் போதைவஸ்து பாவனையாளர்கள், போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிக்கப்பட்ட சில பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளதாகவும், ஏனைய பல பேர் சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலான செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான கைதுகள் இடம்பெறும் நிலையில் இவ்வளவு காலமும் பொலிசாரும், படையினரும்,…

Read More

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று சனிக்கிழமை (23.12.2023) முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப்புகட்டி அவர்களுக்குச் சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைச் சூழல் பாதுகாப்பில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடனும், மாணவர்களின் பன்முக ஆளுமையை விருத்தி செய்யும் நோக்குடனும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி என்னும் நிகழ்ச்சித் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கொக்குத்தொடுவாய் மகா வித்தியாலயத்தின் அதிபர் க.நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கனடா – உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக் குரல் அமைப்பின் தாபகத் தலைவருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கலந்துகொண்டிருந்தார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், விவசாயப் போதனாசிரியர் த.துளசிராம் ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றியிருந்தார்கள்.நூற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பால் சூழல் விழிப்புணர்வுக் குறிப்பேடுகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும்…

Read More

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் (23) உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்தார். உயிரிழப்பு தொடர்பான உடற்கூற்று பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது. இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பரிசோதனைக்கு பின்னர் உயிரிழந்த மாணவியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்குள்ளான 114 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது 114 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் ஏற்கனவே இருந்த விடுதிகளில் இடப்பற்றாக்குறை காணப்பட்டதன் காரணமாக மேலதிகமாக 2 காய்ச்சல் விடுதிகளை இந்த டெங்கு நோயாளர்களுக்கென புதிதாக ஆரம்பித்திருக்கின்றோம். டெங்குத் தொற்றுக்குள்ளாகி விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 114 பேரில் அரை வாசிக்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சலுடன் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அதேபோல அரைவாசிக்கும் மேற்பட்டோருக்கு தாதியரின் கண்காணிப்பில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும் சுகாதார அமைச்சினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுடெங்கு தொற்றுக்குள்ளானோக்குரிய மருந்து வகைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதன் காரணமாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சிகிச்சைகள் உரிய…

Read More

தமிழக முதலமைச்சர் எம்ஜிஆரின் 36வது நினைவு தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி, மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. வவுனியா எம்ஜிஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் வர்த்தக நலன்புரி சங்கத்தின் தலைவர் கோ. சிறீஸ்கந்ததராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி தயாபரன், நற்பணி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read More