Author: ampalam

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றையதினம் திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சலும் வாந்தியும் இருந்ததன் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குறித்த யுவதி டெங்கு தொற்றினால் உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் உடற்கூற்று பரிசோதனைகளின்படி அவரது மரணத்திற்கான காரணம் என்ன என தெரியவில்லை. இந்நிலையில் அவரது உடற்கூற்று…

Read More

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர். சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார். பல்லேகல சிறைச்சாலையில் இருந்து 162 பேரும், வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 42 பேரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 47 பேரும் திருகோணமலை சிறைச்சாலையில் இருந்து 12 பேரும், வவுனியா சிறைச்சாலையில் இருந்து 25 பேரும், யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 16 பேரும் இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். நாளைய தினம் மொத்தமாக 1004 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சக்தி வாய்ந்த மின் மாற்றிகள் பொருத்தும் பணியில் மின் வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மின்சாரம் சிவனடிபாத மலைக்கு வழங்கும் மின் இணைப்பு அம்பலம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள 25 KVA மின் மாற்றிக்கு பதிலாக இரண்டு 160 KVA மின்மாற்றிகள் பொருத்த படவுள்ளதாக மத்திய மாகாண மின் நிர்மாணப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். ஊசி மலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இரண்டு KDA 25 மின் மாற்றிகளில் உள்ளது என மின் சார சபையின் பொறியாளர் தம்மிக்க பண்டார தெரிவித்தார். இந்த புதிய அதி சக்தி வாய்ந்த மின்மாற்றி அமைப்பின் ஊடாக 50 வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சாரத்தை வழங்கும் திறனை சிவனடி பாத மலைக்கு பெற்று கொடுத்து உள்ளதாக நிர்மாண பொறியியலாளர் திரு.தம்மிக்க பண்டார மேலும் தெரிவித்தார். “தர்ம சுகந்தய மனுசத் அறக்கட்டளை”யின் திரு.பியதிஸ்ஸ விக்கிரமரத்ன உள்ளிட்ட குழுவினர் தற்போது பணிய நீர் குழாய் அமைப்பில்…

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவிகாய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த மாணவி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் பத்து பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் 2023.12.17 நண்பகல் 12.30 தொடக்கம் 2023.12.24 அதிகாலை வரையான ஏழு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் உள்ளடங்கலாக 250 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 25 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (24) அதிகாலையும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் இணைந்து விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்ற போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் பொலிசாரினால் விசேடமான சுற்றி வளைப்புகள் பல நடாத்தப்பட்டு பல்வேறு கைது சம்பவங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் மீட்கப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்றுவருகிறது. இந்த வகையிலே சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையிலே பொலிசாரினால் முன்னெடுக்கப்படுகின்ற செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக போதைப்பொருள் தொடர்பான சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்று இன்று அதிகாலை 4:30 மணியளவில் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாடு,…

Read More

சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் மாகாண அணிகளுக்கு இடையிலான 5 ஓவர்கள் கொண்ட DCBC கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று (23) இடம்பெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் Colombo Royals அணியும், Eastern Warriors அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற Eastern Warriors அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய Colombo Royals அணி,5 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 49 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Eastern Warriors அணி ஓவர்களில் 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. உதார சம்பத் 14 பந்துகளுக்கு முகங்கொடுத்து 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். அதற்கமைய இந்த வருடத்திற்கான DCBC கிண்ணத்தை Eastern Warriors அணி தனதாக்கிக் கொண்டது. இந்தப்…

Read More

மூச்சுத் திணறல் காரணமாக நேற்று அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதி பகுதியைச் சேர்ந்த பிருந்தாபன் அட்சரா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 22ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் பெற்றோர் இரவு 12 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு குழந்தையை எடுத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலைவேளை சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது உடமையில் இருந்து 8 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. பொலிஸாரை கண்டதும் குறித்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கும் போது சுன்னாக பொலிஸார் சந்தேகபரை மடக்கி பிடித்தனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

யாழ்ப்பாணம் – நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் 25.12.2023 அன்று நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600 ரூபாவில் இருந்து 900 ரூபாவரை விற்பனை செய்யப்படுகின்றது.

Read More

கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பினரால் மாணவர்கள்,ஆசிரியர்கள் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை 3.00 மணியளவில் கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு கெளரவ விருந்தினராக யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்டணம் அடிகளார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக கட்டைக்காடு பங்குத்தந்தை A.அமல்ராஜ்,கட்டைக்காடு றோ,க,த,க பாடசாலை அதிபர் T.யோகலிங்கம் மற்றும் முள்ளியான் கிராம சேவகர் K.சுபகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். உயர்தர மாணவர்கள் மற்றும் சித்தியடைந்த ஏனைய மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களும் கெளரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். கட்டைக்காடு கப்பல் மாதா உதவும் கரங்கள் அமைப்பு வடமராட்சி கிழக்கில் மட்டுமல்ல யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிகளவான சமூக சேவைகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More