Author: ampalam

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுடைய செவிப்புலன் வலுற்றோர்களுக்கான ஒளிவிழா நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மட்டிக்கலியில் உள்ள செவிப்புலன் வலுவுற்றோர் அமைப்பின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைத்தலைவர் எஸ். குகதாசன் ,சட்டத்தரணி துஷ்யந்தன் , மத்தியஸ்த சபை தவிசாளர் புவநேந்திரன் மற்றும் நகரசபை செயலாளர் என பலர் கலந்துகொண்டார்கள். இதன் போது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கலைநிகழ்வும் இடம்பெற்றது. செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்கள் இந்நிறுவனத்தின் ஆலோசகர் பாலா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிட்ட தக்கது.

Read More

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை நாம் புனரமைத்து கொடுத்தோம். ஆனால் யாழ் மாநகர சபை அதனை பராமரிப்பதாக தெரியவில்லை என தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன் கவலை வெளியிட்டார். தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கலந்துரையாடல் மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் ஆரியகுளத்தை யாழ் மாநகர சபை சிறப்பாக பராமரித்தால் இன்னமும் பல குளங்களை புனரமைக்க தயாராக உள்ளேன். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பார்க்கும்போது சிறப்பாக பராமரிப்பார்கள் போல தெரிகிறது – என்றார். 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

Read More

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து செல்கின்றமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமான இரண்டு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டது. குறித்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். கடந்த ஒரு சில வாரங்களாக அதிகரித்த அளவில் டெங்கு நோயாளிகள் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக ஆண் பெண் மருத்துவ விடுதிகளில் நோயாளர்கள் படுக்கைகள் இன்றி பெரும் சிரமப்படுகிறார்கள் .இந்த நிலைமையை சமாளிப்பதற்காக மேலும் இரு தற்காலிக மருத்துவ விடுதிகள் இன்று திறக்கப்பட்டன.

Read More

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளா பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று 7 மணி நிலவரப்படி 141 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியது. இதனால், கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More

குச்சவெளி பிரதேச செயல பகுதிக்குட்பட்ட தி/ நிலாவெளி கைலேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது No drugs நாங்கள் youth ” போதை பொருள் அற்ற இளைஞர் தலைமுறை ” என்ற தொனிப் பொருளின் கீழ் (22) பாடசாலையில் இடம் பெற்றது.போதையை ஒழிப்பது மற்றும் மூலம் ஏற்படும் தாக்கம் தொடர்பில் மேடை நாடகம் மூலமும் மாணவர்களுக்கு இதன் போது வழிகாட்டப்பட்டது. இதில் வளவாளர்களாக தம்பலகாமம் பிரதேச செயலக சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றியாத், இளைஞர் சேவை அதிகாரி யுவராஜ், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இன்று(23) மாலை இடம்பெற்றது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது அவ் வீதியில் வந்த இரண்டு இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் இரண்டு இளைஞர்களும் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்றனர். பொலிஸாரிடமிருந்து தப்பித்து செல்வதற்காக அதி வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் கந்தர்மடம் சந்தியில் பயணித்த காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தப்பித்தோடிய நிலையில் மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா இன்றையதினம் வெகு சிறப்பாக இடம்பெற்றது. சுவர்க்கவாயில் தரிசனம் இடம்பெற்று அதைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்றது. ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் தேரில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின்னர் தேர் இருப்பிடம் வந்தது. பின்னர் பச்சை சாத்தப்பட்ட சுவாமி ஆலயத்தினுள் சென்றார். இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது கடந்த 15.12.2023 அன்று ஆரம்பமாகியது. தீர்த்தத் திருவிழாவானது நாளையதினம் இடம்பெறும். குறித்த ஆலயத்தில் வருடத்தில் இரண்டும் முறை தேர்த்திருவிழா இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

Read More

அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கொத்து மற்றும் பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுகளின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தீர்மானம் பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே எட்டப்பட்டுள்ளது. அவ்வகையில் எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் நாட்களில் பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Read More

இந்தியாவின் இசை மகுடத்தை சூடிய கில்மிஷா மென்மேலும் வளரவேண்டும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாழ்த்து. இந்தியாவின் இசை மகுடத்தை சூடி எமது நாட்டுக்கு பெருமை சேர்த்த யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கில்மிஷாவுக்கு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘‘சரிகமப’’ சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் கில்மிஷா தனது திறமையை வெளிக்காட்டி முதலிடத்தை தட்டிக்கொண்டமை எமது நாட்டுக்கு பெருமையாகும். குறிப்பாக யாழ். மண்ணின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றிய கில்மிஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது ஆற்றல் மென்மேலும் வளரவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Read More

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்த 25 தமிழக மீனவர்களை வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி 2 படகுகளுடன் நாகட்டினத்தை சேர்நத 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தன்ர. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு படகில் பயணித்த 25 மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளினால் நேற்று (22) பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்பாக முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தக்கல்செய்யப்பட்டது. திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையினை மன்றில் தாக்கல் செய்வதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து வரும் டிசம்பர் 28 ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டு அதுவரை 12 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 13 மீனவர்களுக்கு நிபந்தனையுடனான விடுதலை அறிவிக்கப்பட்டாலும், கடற்படையினரை தாக்கிய வழக்கில் மீனவர்களை விளக்கமறியலில்…

Read More