Author: Kalai

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கொள்வனவு, வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் அச்சிடல் விடயங்களில் கடந்த சில வருடங்களாக பாரிய ஊழல் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். ஊடகங்களுக்குஇன்று (19) கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியுள்ளதாவது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கு வருடாந்தம் அரசாங்கத்தினால் பெருமளவு நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேபோல உலக வங்கி நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறுகின்றன. யுனிசெப் நிதி ஒதுக்கீடுகளும் வருகின்றன. இந்த நிதி ஒதுக்கீடுகள் மூலம் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்களில் ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் அதிக விலைக்கு அச்சிடப்பட்டுள்ளன. அதேகாலப் பகுதியில்…

Read More

தென்னிந்திய திரைப்பட நடிகையான ரம்பா அவர்கள் இன்று காலை நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகை தந்து நல்லூர் கந்தனை தரிசித்தார். இதன்போது அவரது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளும் உடனிருந்தனர். யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குவதற்காக ரம்பா அவர்கள் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக குறித்த நிகழ்வானது எதிர்வரும் 2024.02.09 அன்று பிற்போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ரம்பாவும் குடும்பத்தினரும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு சென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

வவுனியாவில் தொடரும் மழை காரணமாக 279 குடும்பங்களை சேர்ந்த 878 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று தெரிவித்துள்ளது. இதில் 226 குடும்பங்களை சேர்ந்த 694 அங்கத்தவர்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் ஒரு வர்த்தக நிலையம் மற்றும் ஒரு கிராம அபிவிருத்தி சங்கம் என்பன பகுதியளவிலும், புளியங்குளம், ஒலுமடு, சமனங்குளம், மகாமயிலங்குளம், மடுகந்தை, பிறப்பமடுவ பகுதிகளில் 12 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டப்பகுதியில் கத்தி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தி குத்துக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒலிபண்ட் தோட்டத்தை சேர்ந்த நான்கு பேரை நுவரெலியா பொலிஸார் கைது சந்தேகத்தின் பேரில் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. ஒலிபண்ட் தோட்டம் கீழ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 05 தேயிலை மலையில் 05 ஏக்கர் நிலத்தை தனி நபர் ஒருவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் குத்தகைக்கு வழங்கியுள்ளது. குத்தகை காலம் முடிந்த நிலையில் இவ் விவசாய நிலத்தை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதில் குத்தகைக்கு பெற்றவர்களுக்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த நிலம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் த வழக்கு…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இரணைமடு, முத்தையன்கட்டு மற்றும் தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது. எனவே குளங்களின் கீழ் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை இன்று (19) காலை 9 மணி வரையான தகவல் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 286 குடும்பங்களை சேர்ந்த 952 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு ,கனகரத்தினபுரம் ,காதலியர்சமனங்குளம்…

Read More

50 கிராம் கஞ்சா கலந்த மாவாவை உடைமையில் வைத்திருந்தார்கள் என்ற அடிப்படையிலேயே இருவரும்நேற்று(18) இரவு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

இயற்கை அன்னையின் சீற்றத்தால் பாரிய வெள்ளப் பெருக்கு காரணமாக வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு , மன்னார் வவுனியா, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் பெருமளவு மக்கள் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ உதவிகள் முழுமையாக போதாமையால் தன்னார்வு அமைப்புக்கள் , அறக்கட்டளைகள் , கொடையாளர்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து தேவைகளை பூர்த்தி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என தமிழீழ விடுதலை இயக்க யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குழந்தைகளுக்கு தேவையான உணவுகள் எல்லோருக்குமான சுகாதாரத்தை ஒரளவு உறுதி செய்வதுடன் நுளம்புத் தொல்லையில் இருந்து பாதுகாப்பதற்கான உதவிகள் தொற்றா நேயாளர்களுக்கான உதவிகள் மிக முக்கியமானவை. டெங்கு , வாந்திபேதி., வயிற்றோட்டம் போன்ற நோய்கள் விரைவாக பரவும் அபாயம் உள்ளதால் தூய குடிநீர் வசதிகள் உறுதி…

Read More

மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப் பட்டு இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வரும் மக்களை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை நேரடியாக சென்று பார்வையிட்டு உள்ளதோடு அந்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 404 குடும்பங்களைச் சேர்ந்த 1495 நபர்கள், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 நபர்களும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்களும்,மடு பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களைச் சேர்ந்த 119 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 4 தற்காலிக…

Read More

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளப்பாதிப்பினால் பாதிக்கப்பட்டு 3 இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் வசித்து வருகின்றனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்கள் பாதிக்கப்பட்டு மூன்று இடைத்தங்கல் முகாம்களில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை பிரதேச செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலையில் குறித்த இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்க மெசிடோ நிறுவனம் முன் வந்துள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18) மாலை குறித்த இடைத்தங்கல் முகாம்களுக்கு மெசிடோ நிறுவன பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டதோடு முதல் கட்டமாக குழந்தைகளுக்கான பிஸ்கட் மற்றும் பால்மா போன்றவற்றை வழங்கி வைத்துள்ளதோடு,முகாம்களில் உள்ள…

Read More

எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மையுண்டு என்பதுபோல, நன்மைகளுக்குள்ளும் சிறு தீமைகள் இல்லாமலில்லை. ஒட்டுசுட்டான் பிரதேசத்தை மட்டுமன்றி புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பல பகுதிகளையும் தன்னுடைய நீர் வளத்தினால் வளமாக்கி வைத்திருக்கும் முத்தரையன் கட்டுக்குளம் அமைந்தமையால் பல கிராமங்கள் அதன் நீரேந்து பிரதேசத்தில் இருந்தமையால் முற்றாக அழிந்தும் , மக்கள் இடம்பெயரவும் வழி செய்தது. மேல்பற்று வடக்கு பிரிவைச்சேர்ந்த, கற்குளம், மருக்காரமோட்டை, உடையார் சம்மளங்குளம், கருநாவல் பற்று தெற்கு பிரிவைச்சேர்ந்த ஐயம்பெருமாள், கொய்யாக்குளம் ஆகிய கிராமங்களே முத்தரையன்கட்டுக்குளத்தின் நீரேந்துப்பகுதியில் மூழ்கிப்போன கிராமங்களாகும். 01)ஐயம்பெருமாள்- இங்கு 1817 இல் 27 மக்களும், 1839இல் 25 பேரும், 1881இல் 11பேரும், 1891இல் 13 பேரும் இருந்திருக்கின்றனர். 1895ம் ஆண்டளவில் ஒரு வளவையும், 12 பேர் சனத்தொகையையும், ஒரு கோவிலையும், பெரிய விசாலமான அணைக்கட்டையுடைய குளத்தையும் கொண்டிருந்ததுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிக்கு செல்லக்கூடிய ஒரு பாதையையும் கொண்டிருந்திருக்கின்றது. கடந்த 20 வருடத்திற்குள் கூட தமது பூர்வீக காணிகளுக்கு சென்று…

Read More