Author: Kalai

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவில், காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியாவில் 131 பேருக்கான காணி ஆவணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகப்பிரிவிர் உள்ள கணேசபுரம், மணிபுரம், ஆசிகுளம், சமயபுரம் கிராமங்கள் உட்பட பல கிராம மக்கள் நீண்ட காலமாக தமது காணிகளுக்கு காணப்பட்ட அனுமதிப்பத்திரத்தில் இருந்து உறுதிப்பத்திரங்கள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கு.திலீபன், உதவி பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Read More

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய தொலைக்காட்சி சீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிசா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்.-40

Read More

அசாதரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிகரிப்புக்கு காரணம் – பிராந்திய சகாதார பணிப்பாளர் தெரிவிப்பு! தொடரும் அசாதரணமான மழை வீழ்ச்சியே இம்முறை டெங்கு தொற்றின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு காரணம் யாழ் மாவட்டப்பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் கேதேஸ்வரன் சுடிக்காட்டியுள்ளார். இதே நேரம் டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தில் பிரதேச செயலர்கள் பொதுமக்கள் போன்ற தரப்பினரிடமுருந்து முழுமைதான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் கவலை வெளியிட்டார் இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் என்பது குப்பைகளை அகற்றுவது மாத்திரமல்ல கைவிடப்பட்ட காணிகளில் உள்ள நுளம்புகள் பெருகும் இடங்களையும் துப்புரவு செய்ய வேண்டும் இந்த கைவிடப்பட்ட காணிகள் விடயத்தில் பிரதேச செயலர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது தான் உண்மை. நீண்ட காலமாக இந்த விடயத்தினை தெரியப்படுத்தியும் பிரதேச செயலர்கள்…

Read More

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளை கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை குறிப்பிட்டார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஆகியோரின் தலைமையில், மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது. யாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு அபாய நிலை, கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்கள், அபிவிருத்தி திட்டங்கள், மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது. யாழ் மாவட்ட விவசாயிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கில் பற்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் வட மாகாண பிரதி பணிப்பாளரிடம், கௌரவ ஆளுநர்…

Read More

மன்னார் பொது வைத்தியசாலையில் 2024 ஆண்டுக்கான வருடாந்தர பொது ஒன்று கூடல் நிகழ்வு மற்றும் நத்தார் கொண்டாட்ட நிகழ்வும் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் யோகேஸ்வரன் தலைமையின் இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைத்திய சாலை பொது மண்டபத்தில் இடம் பெற்றது. வைத்தியசாலை சூழலை இனக்கப்பாட்டுடனும் சுகாதார ஊழியர்களை மன அமைதியுடனும் மத நல்லிணக்கத்துடனும் வைத்திருக்கும் முகமாக வைத்திய சாலை நலன்புரி சங்கம் மற்றும் சுகாதார தொழில் சங்கங்களின் கட்டமைப்பு இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் , சிறப்பு விருந்தினர்களாக மகபேற்றியல் வைத்திய நிபுணர் பாபு , அருட்தந்தை ஜேம்ஸ் ஜெனிஸ்ரன், வைத்திய சாலை நிர்வாக உத்தியோகஸ்தர் சிவயோகராசா ஆகியோர் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில் வைத்திய சாலை உத்தியோகஸ்தர்கள், பணியாளர்கள், மற்றும் சுகாதார ஊழியர்களால் பல்வேறு கலை…

Read More

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் மற்றையவர் 2 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத்தலைவர் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், மாவட்டத்தின் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முப்படைகளின் பொறுப்பதிகாரிகள், பொலிஸார் என பல்வேறுபட்ட துறைசார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Read More

தற்போது பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பயன்படுத்தக் கூடாது என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாக காய்ச்சல் நிலவுமாயின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார். அத்துடன் அவ்வாறான வைரஸ் தொற்றுகள் காற்றின் மூலம் வேகமாகப் பரவுவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், நோயிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக முகக்கவசத்தை அணியுமாறும் விசேட வைத்திய நிபுணர் நந்தன திக்மதுகொட தெரிவித்தார்.

Read More

வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2023ம் ஆண்டில் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக 22 இலட்சத்து நாற்பதாயிரத்து ஐந்நூறு ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சத்துர வன்னி நாயக்க தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “வவுனியா மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது 771 வியாபார நிலையங்கள், உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் நிறுவன முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த 771 வழக்குகளும் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல் காட்சிப்படுத்துதல், விலை காட்சிப்படுத்தாமல் பொருட்களை விற்பனை செய்தல், கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க கூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்தல், போன்ற பல்வேறு விடயங்களிற்கு எதிராகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகும். இதேவேளை பாவனையாளர்கள் அதிகார சபையினால் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள், பொலிஸார், அரச…

Read More

புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று மாலை வெடிவிபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இதன்காரணமாக உயிர்சேதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து இந்திய அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் இந்தியாவில் உள்ள தனது குடிமக்களை, குறிப்பாக புதுடில்லியில் உள்ளவர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது எதிர் தாக்குதலை தொடங்கியதில் இருந்து, யூத எதிர்ப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், உலகம் முழுவதும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் எச்சரிக்கையுடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 5:20 மணியளவில் புதுடில்லி தூதரகத்திற்கு அருகாமையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஜனவரியிலும் புதுடில்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே யாருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் ஒரு சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் பதிவானது. எனினும், இந்த குண்டுவெடிப்பை பயங்கரவாத சம்பவமாகவே கருதுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Read More