Author: Kalai

நாடு பூராகவும் போதை பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன இந்நிலையில் நானுஓயா பிரதான நகரில் திங்கட்கிழமை (18) விசேட சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக நானுஓயா பிரதான நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு புகையிரதம் மூலம் பயணம் செய்பவர்களையும் அவர்கள் கொண்டு செல்லும் பொதிகளையும் பரிசோதனை செய்து வருகின்றனர். நானுஓயா பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய் சகிதம் இவ் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . அத்துடன் நானுஓயா பிரதான வீதியில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களையும் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் , வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரியும் இளைஞர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Read More

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயத்தின், தொழில் முனைவுடன் கூடிய பாடசாலைத் தோட்டத்தின் விவசாய உணவு தொழில்நுட்ப கைத்தொழில்கள் கண்காட்சி இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாடசாலை வளாகத்தில் அதிபர் திருமதி தேவரதி சுதேஸ்கரன் தலைமையில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண திட்டமிடல் பிரதிப் பிரதம செயலாளர் க.சிவச்சந்திரன், வடமாகாண மாகாண திணைக்கள கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி வேழினி பாலேந்திரன், வடமாகாண மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், ஐ.நா உணவு விவசாய நிறுவன களத்திட்ட இணைப்பாளர் அ.வாகீசன், மாகாண சுதேச வைத்திய திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி கனகேஸ்வரி ஜெபநாமகணேசன் மற்றும் திணைக்களத்தின் சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள்,…

Read More

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று (18) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து கருவறையில் வீற்றிருக்கும் கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, தொடர்ந்து எம்பெருமான் சமேதராக உள்வீதி, வெளிவீதியில் வலம்வந்து அருள்பாலித்தார். இன்று ஆரம்பாகிய கொடியேற்ற மஹோற்சவத்தினையடுத்து, எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும் இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Read More

யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சனசமூக பகுதி மக்கள், ஸரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னராக ஈழத்து குயில் கில்மிஷா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் – அரியாலை கலைமகள் சன சமூக நிலையத்திற்கு அருகாமையில் வசித்துவரும் இவர் கடந்த 07.06.2023 அன்று சரிகமப பாடல் போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டார். இப்போட்டியானது இம்முறை லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 இல் மொத்தமாக 28 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பங்கேற்ற குழந்தைகள் தமது திறமையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான முறையில் இறுதிவரை நகர்த்திச் சென்றுள்ளனர். 17.12.2023 அன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் மொத்தம் 6 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ், நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் இறுதிச்சுற்றில் பங்குபற்றினர்.…

Read More

நல்லதண்ணி வன ஜீவராசிகள் காரியாலயத்திற்கு உற்ப்பட்ட மஸ்கெலிய மல்லியப்பு மற்றும் டீசைட் தோட்ட தேயிலை மலை பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதாக இத் தோட்டங்களில் பணி புரியும் மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வளர்ப்பு நாய்கள் திடீரென இரவு நேரங்களில் சத்தம் இடுவதாகவும் காலையில் சென்று பார்க்கும் போது நாய்கள் காணாமல் போவதாகவும், மேலும் கடந்த வாரம் இரவு 9 மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனது முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த பகுதியில் உள்ள பிரதான சாலையில் இருந்து சிறுத்தை ஒன்று தேயிலை மலை பகுதியை நோக்கி பாய்ந்து சென்று பதுங்கிதாக குறித்த சாரதி தெரிவிக்கின்றார். இது குறித்து இப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில் மஸ்கெலியா பிரதான பாதைக்கு அருகில் உள்ள சின்ன சோளங்கந்தை தோட்டத்தில் தேயிலை மலைகள் காடுகளாக காணப்படுகின்ற. அந்த மலைப்பகுதியில் சிறுத்தைகள் பதுங்கி இருந்து…

Read More

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கத்தரிக்காய்களை திருடியவர் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி கோப்பாய் மத்தி பகுதியில் 300 கிலோகிராம் வரையான கத்திரிக்காய் தோட்டத்தில் திருட்டுப்போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் 20 வயதான சந்தேக நபர் நேற்று (17) கைது செய்யப்பட்டார்.

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன, வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு மற்றும்புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் பணிப்பாளர், மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கு வருகைதந்த நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த புள்ளிவிபரவியல் பிரதிப் பணிப்பாளர் வித்தியானந்தநேசன் யாழ்ப்பாண மாவட்டத்தில் குடிசன,வீட்டுவசதிகள் தொகை மதிப்பின் முதற்கட்டமான கட்டிடங்களை நிரற்படுத்தல் நடவடிக்கையானது நிறைவடைந்துள்ளது என்றார். மேலும் தெரிவிக்கையில், குறுகிய காலத்தில் யாழ்ப்பாண மாவட்ட பணிகள் பூர்த்தியாகியுள்ளது. 230000ற்கு மேற்பட்ட கட்டிடக்கூறுகளை யாழ்ப்பாணம் கொண்டுள்ளது இதன்போது தெரியவருகிறது. காகிதத்தில் செய்யும் வேலைகளை இம்முறை இலத்திரனியல் முறையில் செய்திருக்கிறோம்.காகிதத்தில் தரவுகளை சேகரிக்க 4 வருடங்கள் செல்லும். அந்த காலத்தை இலத்திரனியல் முறை குறைத்துள்ளது.நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குடிசன மதிப்பீடு முக்கியம் என்றார். இதன்போது யாழ்ப்பாண மாவட்ட வரைபடம், பிரதேச செயலாளர் பிரிவு…

Read More

வவுனியாவில் பிறப்புச் சான்றிதழை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழு தலைவருமான கு. திலீபன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நடமாடும் சேவை மூலமாக பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 58 பேருக்கான பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன. நீண்ட காலமாக பிறப்புச் சான்றிதழை பெறுவதில் சிக்கல் நிலைகளை எதிர்கொண்டிருந்த பலர் குறித்த நடமாடும் சேவையில் நமது விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்த நிலையிலேயே அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழ்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழு தலைவருமான கு. திலீபன், வட மாகாண பிரதி பதிவாளர் நாயகம் திருமதி ஆனந்தி ஜெயரட்னம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசன், உதவிப் பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட பதிவாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கருத்து…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . முத்துஐயன் கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் திறக்கபட்டுள்ளதுடன் 2 அடி வான் பாய்கிறது. முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று (18.12.2023) அதிகாலை தொடக்கம் கிராமத்திற்குள் வெள்ள நீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் அவர்களை கிராமத்தில் இருந்து மீட்டு இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 111 குடும்பங்களை சேர்ந்த 355 பேரே இவ்வாறு மன்னகண்டல் அ.த.க பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . மழை தொடர்ந்து பெய்துவருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர். இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு…

Read More

மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்து செல்வதால் தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (18) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,, நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 632 குடும்பங்களைச் சேர்ந்த 2245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 404 குடும்பங்களைச் சேர்ந்த 1495 நபர்களும்,நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 04 நபர்களும்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 175 குடும்பங்களைச் சேர்ந்த 427 நபர்களும்,மடு பிரதேச செயலாளர் பிரிவில் 52 குடும்பங்களைச் சேர்ந்த…

Read More