Author: Kalai

முல்லைத்தீவு மாவட்டத்தில் பின்வரும் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள பின்வரும் பாடசாலைகள் தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலை காரணமாக நாளைய தினம் (19.12.2023) இயங்காது என்பதனை அறியத்தருகின்றேன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவு 1 மு/மண்ணகண்டல் அ.த.க.பாடசாலை 2 மு/இருட்டுமடு தமிழ் வித்யாலயம் 3 மு/நெத்தலியாறு ஆரம்பப் பாடசாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவு 1.மு/கருவேலன்கண்டல் அ.த.க.பாடசாலை 2.மு/கூழாமுறிப்பு அ.த.க.பாடசாலை 3.மு/முத்துவிநாயகபுரம் மகாவித்தியாலயம் 4.மு/பேராறு அ.த.க.பாடசாலை மாவட்டச் செயலாளர் மாவட்ட செயலகம்,(அனர்த்த முகாமைத்துவப்பிரிவு) முல்லைத்தீவு.

Read More

வவுனியாவில் வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா இன்று வர்த்தகர் சங்கத்தில் வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வவுனியா நகரில் கண்டி வீதி,பஜார் வீதியில் அண்மையில் வர்த்தக நிலையங்கள் சில உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டு நீதிமன்ற நடவடிக்கைக்குட்பட்ட பிரதான குற்றவாளி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். அத்துடன் இரண்டாம் குறுக்குத் தெரு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் உள்ள பெறுமதி வாய்ந்த சைட் கண்ணாடிகள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மேற்கொண்ட நடவடிக்கையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த கொரியர் நிலையத்தின் முகாமையாளராக கடமையாற்றும் நபர் இந் நடவடிக்கையில் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின்போது…

Read More

மலேசியாவில் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் 2023 (Asian Classic Powerlifting Championship 2023) போட்டியில் இலங்கை தேசிய பளுத்தூக்கல் அணிசார்பாக பங்குபற்றிய புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த புசாந்தன் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒரு வார காலத்திற்கு போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு இலங்கை பொலிஸ் மா அதிபரினால் பொலிஸாருக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றையதினம் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸ் விசேட பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு இணங்க காங்கேசன்துறை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த பகுதி அதிரடியாக முற்றுகையிடப்பட்டது. இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கசிப்பு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் கோடா என்பவற்றுடன் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

Read More

எல்லை தாண்டி வந்து யாழ்ப்பாணம் – காரைநகர் – கோவளம் கடற்பரப்பிள் உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால், ஒரு படகுடன் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பதின்நான்கு பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.. பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் நீரியல்வள திணைக்களத்தில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அவர்கள் 14பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டார். இந்நிலையில் 12 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இரு மீனவர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

யாழ்ப்மாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வருகின்ற காலநிலை காரணமாக மக்களது இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 38.4 மில்லிமீட்டர் அளவிலான மழைவீழ்ச்சியானது யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதன் தாக்கம் உணரப்பட்டாலும் கோப்பாய், உடுவில், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளில் இதனுடைய தாக்கம் கூடுதலாக உணரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 அங்கத்தினர்களும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு அங்கத்தினர்களும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 அங்கத்தினர்களும் என மொத்தமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 8 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஆறு குடும்பங்களைச்…

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் களஞ்சிய அறையில் பழுதடைந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்துவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது . யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்தமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட களஞ்சியமொன்றில் வைத்திருந்த 20.75 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகளில் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக விவசாயிகள் விசனம் தெரிவித்தனர். குறித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்,பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், திட்ட பணிப்பாளர் குறித்த களஞ்சியசாலையை நேற்று பார்வையிட்டதோடு பெருமளவான உருளைக்கிழங்கு விதைகள் பாதிக்கப்பட்டமையை அவதானித்தனர். இது தொடர்பில் அரச விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி பிரிவு, விதைகள் ஆராய்ச்சி பிரிவு, கமலநல அபிவிருத்தி திணைக்களம் என துறை சார்ந்த தரப்புக்களின் பங்கேற்புடன் விசேட கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.…

Read More

வடக்கு மாகாணத்தில் கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. அதற்கமைய, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் கண்புரை சத்திரசிகிச்சைகள் இலவசமாக முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில், கண்புரை காரணமாக பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு இந்த இலவச சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இந்த இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. வவுனியா, சிலாபம், முல்லைத்தீவு ஆகிய வைத்தியசாலைகளை சேர்ந்த மூன்று வைத்தியர்களுடன் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ள மூன்று வைத்தியர்களும் இணைந்து இந்த சத்திர சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மலேசியாவின் அலகா, ஆனந்தா நிதியத்தின் அனுசரணையுடன் இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் மேலும் சில சர்வதேச அமைப்புகளும் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்திற்கான முதல்கட்ட சத்திர சிகிச்சை…

Read More

முத்தையன்கட்டு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் 4 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் நான்கு வான் கதவுகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன இதேவேளை குளங்கள் வான் பாய்வதனை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருவதுடன் நீர்நிலைகளில் மீன்பிடித்தும் வருகின்றனர். தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் அதிகரித்து வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1289 குடும்பங்களை சேர்ந்த 4217 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 279 குடும்பங்களை சேர்ந்த 884 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும்…

Read More

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கிடைத்து வருகின்ற கனமழைக்கான பிரதான காரணம், வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி, இலங்கைக்கு கீழாக நகர்ந்து அரபிக்கடலை சென்றடைகின்றமையாகும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சுழற்சி காற்றானது நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையிலிருந்து முழுமையாக விடுபட்டு அரபிக் கடலுக்கு செல்வதன் காரணமாக நாளை இரவு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் படிப்படியாக மழை வீழ்ச்சி குறைவடைவதற்கான சந்தர்ப்பம் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது. கிடைத்து வருகின்ற கனமழை காரணமாகவும் வடக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பரப்பு நீர் நிலைகள் அவற்றினுடைய உவர்நீரை பல்வேற்றுவதன் காரணமாகவும் பல்வேறு பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளும், கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியும், வவுனியா மாவட்டத்தினுடைய…

Read More