Author: Kalai

யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாக யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டியுள்ளது. யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மார்கழி இசை நிகழ்வில் ஒரு அங்கமாக வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ள உற்பத்தியாளர்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையினரால் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு கடைகளுக்கும் நாளொன்றுக்கு தலா 1000ரூபா வரி கட்ட வேண்டும் என யாழ்ப்பாண மாநகர சபையினால் அறிவித்தல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை தொடர்பில் யாழ் வணிகர் கழகம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் மூலம் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடுஉள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை காட்சிப்படுத்தும் கண்காட்சி இலவசமாக முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாண மாநகர சபையானது அடாவடியாக செயற்படுவதாகவும் யாழ்ப்பாணம் வணிகக் கழகம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

Read More

யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர். கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

நத்தார் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 23கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலைசெய்யப்பட்டனர். இன்று நத்தார் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 1004 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது. அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 23பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர்

Read More

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேவேளை நாடளாவிய ரீதியில் 1004 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

Read More

தர்மபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட விஸ்வமடு கொழுந்துபுலவுபகுதியில் தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீட்டின் பின்புறமாக உள்ள தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி தொட்டியின் பின்புறமாக தனியாக மறைவாக ஓரிடம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாரால் இன்றைய தினம் 23.12.2023கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து பெருமளவு கசிப்பு கோடாவை போலீசாரால் அளிக்கப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் 712 போத்தல் கோடாவும் 34 போத்தல் கசிப்பும்போலீசார் மீட்கப்பட்டுள்ளதுடன் அன்றைய தினம் 24.12.2023சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் போலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்

Read More

நேற்றையதினம் (22) வீட்டுக்கு மேலே ஏறி நின்று தூசு தட்டிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்துள்ளார். அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த வடிவேலு பரமகுலதேவராசா (வயது 75) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வீட்டுக்கு மேலே ஏறி தூசி தட்டும் போது கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

சர்வதேச மாற்று வலுவுடையோர் தினம் கடந்த 04ம் திகதி இடம்பெற்றிருந்தது இதன் அடிப்படையில் வலயக்கல்வி அலுவலகம் கிளிநொச்சி வடக்கு விசட கல்வி பிரிவினரால் நடாத்தப்படும் மாற்றுவலுவுடையோர் தின நிகழ்வு இன்று கிளி/பளை மத்திய கல்லூரி்யின் ஆருக்‌ஷ்கிருத்திக் கலையரங்கத்தில்இடம்பெற்றிருந்தது. மாற்று வலுவுடையோர் தினத்தை முன்னிட்டு வலயக்கல்வி மற்றும் கிளிநொச்சி வடக்கு விசட கல்வி பிரிவினரால் நடாத்தப்படும் மாற்றுவலுவுடையோர் தின நிகழ்வு இன்று கிளி/பளை மத்திய கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வானது 23/12/2023 இன்று காலை 10.00மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.இந்நிகழ்வில் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களால் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டனர். குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சஞ்சீவன் குனஜா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் அவர்களால் தேசிய கொடியினை ஏற்றி வைத்ததோடு வலயக்கல்வி கொடியினை வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.எஸ் சிவனருள்ராஜா அவர்கள் ஏற்றி வைத்தமையை அடுத்து மங்களவிளக்கினை பிரதம விருந்தினர் மற்றும் கெளரவ விருந்தினர் வடக்கு…

Read More

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புகளுக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்பின்னர் கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், 28 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வழங்கவுள்ளோம். இதற்கு சகல பொது அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். பொது மன்னிப்பின் அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் இதற்கு ஜனாதிபதி நடவடிக்கை…

Read More

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டிப்பர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனமும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள். புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து டிப்பர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.ஹெரத் தலைமையிலான பொலிஸாரால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது. வள்ளிபுனம் பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி சென்ற குறித்த டிப்பர் வாகனம் தேராவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இன்று (23.12.2023) காலை வழிமறித்து சோதனை செய்த வேளை டிப்பருக்குள் பாலை மரக்குற்றிகளை போட்டு அதன்மேல் சல்லிக்கல்லுகளை போட்டு மறைத்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லமுற்பட்ட போது இவை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளன. சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக அறுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டவேளை சாரதியினையும் வாகனத்தினையும் பொலிஸார் கைது செய்துள்ளார்கள். கல்லாறு தர்மபுரத்தினை சேர்ந்த வாகன சாரதியே இதன்போது…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்று (22) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புதிதாக நியமனம் பெற்ற வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக சபையினருடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக வைத்தியசாலையில் நிலவும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்திய தாதிகள் உட்பட்ட ஆளனிப் பற்றாக்குறை மற்றும் அதனை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. அதேபோன்று, கட்டிட வசதிகளை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்ற நிலையில், தற்போது கட்டப்பட்டு வருகின்ற 6 மாடி கட்டிடத் தொகுதியின் வேலைகளை பூரத்தி செய்வதற்கு குறைந்த பட்சம் 800 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும், தற்போது 400 மில்லின் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 400 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுவதாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.…

Read More