Author: Kalai

திருகோணாமலை மாவட்ட செயலாளர் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஜி.கே.ஜி.ஏ.ஆர்.பீ.கே. நந்தன அவர்களுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் மூதூர் பிரதேச செயலகத்திற்கு (17) விஜயமென்றை மேற்கொண்டிருந்தனர். அந் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இருந்தார்கள். நுவரெலியா மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மூதூர் பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அனுபவ பகிர்வுகளை கலந்துரையாடியதுடன், இறால்குழி கிராம உத்தியோகத்தர் பிரிவில் இயங்கும் மகளிர் சங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளின் நிகழ்வுகளையும், அனுபவ பகிர்வுகளையும் கேட்டு அறிந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வுக்கு அகம் நிறுவனம் இணை அனுசரணை வழங்கியிருந்தார்கள்.

Read More

இடைவிடாது தொடரும் மழை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்! முல்லைத்தீவில் 1126 குடும்பங்களை குடும்பங்களை சேர்ந்த 3463 பேர் பாதிப்பு! 68 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது முத்துஐயன்கட்டுக்குளம் 4 வான் கதவுகளும் 2’ 9” (2 அடி 9 அங்குலம்) அளவில் திறக்கபட்டுள்ளதுடன் 2’ (2 அடி) வான் பாய்கிறது முத்துயன்கட்டு ,பேராறு , முத்துவினாயகபுரம்,பண்டாரவன்னி வசந்தபுரம் மன்னகண்டல் ஆகிய கிராம மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் இதேவேளைபுதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதியில் மன்னாகண்டல் பகுதியில் வெள்ளநீர் வீதியை குறுக்கறுத்து பாய்வதால் வீதி போக்குவரத்து தடை ஏற்ப்பட்டுள்ளது மதவளசிங்கன்குளம் இரண்டு அடி வான் பாய்கிறது இதன்ல் பூதன்வயல், கணுக்கேணி கிழக்கு,முறிப்ப பகுதி மக்கள்…

Read More

வவுனியா சாளம்பைக்குளம் அல்-அக்க்ஷா மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டில் நான்கு வருடங்களிற்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திரும்பி அனுப்பி வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான்கு வருடங்களுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் குறித்த பாடசாலைக்கான கட்டடம் ஒன்றினை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. எனினும் நாட்டின் நிலை காரணமாக கட்டிட பணிகள் இடைநிறுத்தப்பட்டு குறித்த நிதியானது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் வேண்டுகோள் விடுக்கப்பட்டதன் அடிப்படையில் மீண்டும் அவ் நிதி மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் குறித்த நிதியினை இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இடைநிறுத்தி இருக்கின்றார் என்ற செய்தியினை அறிந்து…

Read More

வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்றிருக்கும் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கிவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உதவும் உள்ளங்களிடமும், தன்னார்வ அமைப்புகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். அதனையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள், வெள்ள அனர்த்தம் காரணமாக தமது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்து, கிளி/கண்டாவளை மகாவித்தியாலயம், கிளி/நாகேந்திரபுரம் அ.த.க.பாடசாலை, கிளி/முரசுமோட்டை அ.த.க. பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். அம்மக்களை நேற்றைய தினம் நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, பரோபகாரியும், சமூக ஆர்வலருமான “நளின் IT” நிறுவன உரிமையாளர் சஞ்சீவ் அவர்களது நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார். இடம்பெயர்ந்துள்ள 86இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், கண்டாவளைப் பிரதேச செயலர், கிராம அலுவலர்கள், சமுர்த்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து சமைத்த உணவுகளை வழங்கிவருகின்றனர். எனினும் அந்த மக்களுக்கான பாய்கள், போர்வைகள், நுளம்புவலைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தேவைப்பாடு நிலவுகிறது. சமநேரத்தில் பொன்னகர் மற்றும்…

Read More

  வெளித்தொடர்புகளின்றி வெள்ளத்தினால் தனிமைப்படுத்தப்பட்டது முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட சிராட்டிகுளம் கிராமம். பறங்கியாறு பெருக்கெடுத்திருப்பதால் வெளி பிரதேச தொடர்புகள் எதுவுமின்றி குறித்த கிராமம் பாதிப்படைந்துள்ளது இதேவேளை வீடுகளினுள் வெள்ளநீர் மற்றும் ஆற்று நீர் புகுந்துள்ளமையினால் வீடுகளில் கூட உணவுகளை தயார் செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர் குறித்த பிரதேசத்தில் வர்த்தக நிலையங்கள் இல்லாத நிலையில் , 7,8 கிலோமீற்றர் தூரமுள்ள நட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு சென்றே பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்றும் தெரிவித்த மக்கள் பறங்கியாறு பெருக்கெடுத்து குடிமனைக்குள்ளாக பாய்வதால் வைத்தியசாலைக்கு கூட செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர் கால்நடைகள் கூட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் , சிலவற்றை இறந்த நிலையில் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் சிறு குழந்தைகளுடன் வாழ்ந்துவரும் நிலையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி வீடுகளைவிட்டு வெளியேற வேண்டிய சூழலில் தாம் இருப்பதாக தெரிவித்த அவர்கள் , வீடுகளும் இடிந்துவிழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் சிராட்டிகுளம் கிராம அலுவலர்…

Read More

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில், C பிரிவில் சாம்பியனாக தெரிவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந்தன் எனும் மாணவனையும் போட்டியில் வெற்றி பெற்ற ஏனைய மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில், மாணவர்களை போட்டிக்கு தயார் செய்த UCMAS Jaffna Town Center இன் தலைவர் திருமதி தயானா சந்துரு தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதனும் , சிறப்பு விருந்தினராக சட்டத்தரணி காயத்திரி கோகுலனும் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கான கேடயங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தனர். போட்டியில் சம்பியன் வென்ற மாணவனுக்கான கேடயத்தை பிரதம விருந்தினரான கோசலை மதன் வழங்கி வைக்க , 50 ஆயிரம் ரூபாய் பணப் பரிசினை சட்டத்தரணி காயத்திரி கோகுலன் மற்றும் தயானா சந்துரு ஆகியோர் வழங்கி வைத்தனர்.

Read More

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய ரியலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரிகமப இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியிருந்தது. இதில் இலங்கையில் இருந்து இரு சிறுமிகள் பங்கேற்றிருந்தனர். மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திருந்தனர். இதில் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது ஆளாக கில்மிஷா தெரிவாயிருந்ததுடன், அஷானி இறுதித் தருணத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார். பல கட்டங்களில், பல சுற்றுகளில் இந்த இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருந்ததுடன், மக்களின் அமோக ஆதரவையும் பெற்றிருந்தனர். அந்த வகையில், இன்றைய தினம் இறுதிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இறுதிப்போட்டி இடம்பெற்றது. ஆறு பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்தனர். அவர்களில்…

Read More

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கருகில் இன்று மாலை கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியது. கிளிநொச்சி பகுதியில் இருந்து வவுனியா நோக்கிவந்துகொண்டிருந்த குறித்த கப்வாகனம் நொச்சிமோட்டை பாலத்தடியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி விபத்திற்குள்ளாகியது. குறித்த விபத்தில் வாகனத்தை ஓட்டிய சாரதி அதிஸ்டவசாமக சிறுகாயங்களுடன் உயிர்பிழைத்தார். விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். வவுனியாவில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவிவரும் நிலையில் சாரதிகள் தமது வாகனங்களை மிகவும் அவதானமாக ஓட்டுமாறு பொலிசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Read More

விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மாலை விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , விநாயக பெருமான் உள்வீதி உலா வந்து , இடும்பன் வாகனத்தில் எழுந்தருளி கஜமுகா சூரனை வதம் செய்தார். சூரன் போர் திருவிழாவில்அடியவர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கினார்கள்.

Read More

நாடளாவிய ரீதியில் இன்று (17) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி பால்பண்ணை பகுதியிலேயே 20, 21,23 வயதுடைய மூவர் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் ஹெரோயின் மற்றும் மாவா என்பன கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read More