Author: Kalai

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே இன்று(17) மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதனையடுத்து, இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்திய மீனவர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.-

Read More

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் தூக்கில் தொங்குவதை அவதானித்த உறவுகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ReplyForward

Read More

குறித்த நிகழ்வு (15) பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.பெண்கள் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுபடுத்தல் அமைச்சின் மகளிர் பணியகத்தினால் 10 பெண்தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலைமையின் கீழ் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் , உதவி பிரதேச செயலாளர் யு.குமணன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத்,நிருவாக உத்தியோகத்தர் ஜெயந்தி டெரிக், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சிவகுமார், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு. சாய்சாதனி ,கிராம அதிகாரி என்.ஜெயகாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Read More

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் அன்று 17.12.2023தருமபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய போதவஸ்து மாத்திரைகள் மற்றும் சிறிதளவு கஞ்சா நான்கு தொலைபேசிகள் போத வருஷத்துக்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் இரண்டு கூறிய கத்திகள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல்வேறு குற்ற செயலுடன் தொடர்புபட்டு சிறை தண்டனை அனுபவிக்கப்பட்டு தற்பொழுதே விடுதலை ஆகி வந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய தினம் 18.12.2023 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்

Read More

கட்டைக்காடு சென்மேரிஸ் வி.க நடாத்தும் KSPL-2 இன் ஆரம்ப நிகழ்வு இன்று மாலை 03.00 மணியளவில் சென்மேரிஸ் மைதானத்தில் ஆரம்பமானது. சென்மேரிஸ் கழக தலைவர் பி.றஜீத் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்விற்கு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் உட்பட கிராம அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். முதல் போட்டியாக EASTEN UNITED எதிர் FIGHTER KINGS அணிகள் மோதின.போட்டியின் முடிவு சமநிலையாக மாறா இரண்டாவது போட்டியாக 3 D STAR அணியை எதிர்த்து கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலை அணி மோதின.இரண்டாவது போட்டியும் சமநிலையில் முடிய நான்கு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. +5 All reactions: 11

Read More

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள். ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இச் சம்பவம் இன்று மதியம் ஏற்பட்டு உள்ளது.அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கொட்டகலை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் வந்து மரத்தை டோசர்கள் கொண்டு அகற்றிய பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

Read More

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர்பி.எஸ்.எம்.சார்ள்ஸ், துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு நுளம்பு அதிகம் பரவும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறிப்பாக வடிகான்களில் நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருக்கம் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறித்த வடிகான்களை சுத்தப்படுத்துவதோடு, வீதி ஓரங்களில் போடப்பட்டிருக்கக்கூடிய நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் பொலீசாருக்கு ஆளுநர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இந்த விடையம் தொடர்பில் உடன் அமுலாகும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலாளளர் மு.நந்தகோபாலன் ஊடாக வடக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலீஸ் மாஅதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு சுகாதாரத்தரப்பினர் , உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் ஆளுநர் ஆலோசனை வழங்கி உள்ளார். மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை யாழ் மாவட்டத்தில் …

Read More

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டம் பாரியளவில் பாதிப்படைந்துள்ளது குறிப்பாக இரணைமடு குளத்தின் தாழ்பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களான கண்டாவளை,தர்மபுரம்,பிரமந்தனாறு,முரசுமோட்டை,புன்னைநீராவி,பெரியகுளம்,குமரபுரம்,ஊரியான்,உமையாள்புரம்,பரந்தன்,புளியம்பொக்கனை ஆகிய இடங்கள் பாரியளவில் வெள்ளநீர் வீடுகளிற்குள் புகுந்து மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 04 நலன்புரி நிலையங்களான நாகேந்திரபுரம் மகாவித்தியாலயம்,முரசுமோட்டை அ.த.க பாடசாலை,கண்டாவளை மகாவித்தியாலயம் ஆகிய இடங்களை இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.மேலும் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடங்களில் 1364குடும்பங்களைச் சேர்ந்த 4305பேர் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதே வேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 86குடும்பங்களை சேர்ந்த 263 பேர் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.அதை விட 707குடும்பங்களை சேர்ந்த 2214பேர் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சிமாவட்ட அரசாங்க அதிபர் அவர்களில் குழுவினர் இன்று வெள்ள…

Read More

விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமல் படுத்தும் வகையில் இத்திட்டம் தொடர்பாக நேற்று 16.12.2023 மாலை பொலிஸ் மா அதிபர் அவர்கள் அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது இவ் பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து இவ் குழுவின் ஊடாக 17.12.2023 அதாவது இன்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதலை மேற்கொண்ட போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்.113

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் வழிகாட்டலின் பேரில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாதணி வவுச்சர்களை வழங்கும் செயல்பாடு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள 677 கிராமிய பாடசாலைகளைச் சேர்ந்த 1,57,698 மாணவர்களை இனங்கண்டு 3000 ரூபா பெறுமதியான இலவச பாதணி வவுச்சர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More