Author: Kalai

சுனாமி பேரழிவு ஏற்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்த உறவுகளுக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Read More

சாவகச்சேரி நகரப் பகுதியில் போதையூட்டும் லேகியத்தினை விற்பனை செய்த ஒருவர் இன்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து 3கிலோ 720 கிராம் லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வடக்கில் அடுத்த பருவ காலத்தில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையை சுமார் 150 ஹக்ரேயரில் மேற்கொள்வதற்கு 50 வீத மானியத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து இன்றையதினம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வருடம் நவீன மயப்படுத்தப்பட்ட மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வடக்கு விவசாயிகளுக்காக எடுத்துவரப்பட்ட சுமார் 21000 கிலோ உருளைக் கிழங்கு பயன்படுத்த முடியாத நிலையில் தொடர்பாகவும் இச்சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்கள் நடைபெறாது எனவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆழிப்பேரலை பேரிடர் ஏற்பட்டு 19 ம் ஆண்டை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் ஆழிப் பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வும் அத் தாக்கத்தை எடுத்துக்காட்டும் சிற்பக் கண்காட்சியும் தெல்லிப்பழை ஆனந்தன் சிற்பாலயத்தில் இன்று(26) இடம்பெற்றது. ஆழிப்பேரலை தாக்கத்தை சித்தரிக்கும் விதமாக செதுக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் சுடரேற்றி உயிரிழந்த மக்கள் அஞ்சலிக்கப்பட்டனர். இவற்றுடன் தத்துரூபமாகச் செதுக்கப்பட்ட பல்வேறு சிற்பங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றை பலர் பார்வையிட்டனர்.

Read More

வவுனியா குட்செட்வீதி கருமாரியம்மன் ஆலயத்தில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது சுனாமியில் உயிர்நீத்த உறவுகளிற்காக மோட்சதீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள்,அந்தணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நினைவு கூரப்பட்டது. இவ் நினைவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக தேசியகொடியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் ஏற்றிவைத்தார். பின்னர் மாவட்ட கேட்போர் கூடத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல் ஆத்மாசாந்தி விளக்கேற்றல் பிராத்தனை நிகழ்வும், இரண்டு நிமிடமென அஞ்சலியுடன் நினைவூப்பேருரையும், விழிப்புணர்வூட்டலும் இடம்பெற்றது இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை பிரதிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீ மோகனன், மற்றும், சர்வமதத்தலைவர்கள் பதவிநிலை அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்ட ஆத்மாசாந்தி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

Read More

இலங்கையில் இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது நினைவாலயத்தில் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. முன்னராக இலங்கை தேசிய கொடியை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏற்றிவைத்தார். பொதுச்சுடரை மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்திஏற்றிவைத்தை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து உறவினர்கள் அஞ்சலித்தனர். இதன்போது பெருமளவான பொதுமக்கள்,மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர். கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சுனாமி பேரலையில் உயிர்நீத்தவர்களிற்கான 19 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது. பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் குறித்த பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நினைவு தூபி சுனாமி பேரலை ஏற்பட்டு 31 ஆம் நாளில் நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினரால் அமைக்கப்பட்டிருந்ததுடன்,இலங்கையின் முதலாவதாக அமைக்கப்பட்ட தூபியாகவும் விளங்குகின்றது. தற்போது நகரசபையால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராயா, தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதகுருமார்கள்,பொதுஅமைப்புகள், கிராமமக்கள், சமூகஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Read More

யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்த தலமையில் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் யாழ்பாண பொலிஸ் போதைதடுப்பு பிரிவினரும் இனைந்து வெவ்வேறு இடங்களில் நடத்திய சுற்றிவளைப்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யபட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 117கால் சாராய போத்தல்களும், 9 முழு சாராய போத்தல்களும் நிலத்தில் புதைக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கைபெற்றபட்டது. இவர்கள் யாழ்பாண தலமைபொலிஸ் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லபட்டு நீதிமன்றில் முற்படுத்தபடுவார்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

Read More

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இறுதி வருட கலைப்பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திடீரென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சாயுடை, மாவிட்டபுரம் , தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் சுபீனா (வயது 25) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்று மாவிட்டபுரம் இந்து மயானத்தில் தகனக் கிரியைகள் இடம்பெற்றன. அவரது இறுதி சடங்குகளில் பல்கலைக்கழக மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்ணீரால் அஞ்சலி செலுத்தினர். குறித்த மாணவிக்கு கடந்த 17ஆம் திகதி காய்ச்சலும் வாந்தியும் இருந்ததன் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி குறித்த யுவதி திடீரென மயக்கமடைந்ததால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்…

Read More