Author: ampalam

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பருத்தித்துறை தலைமைப்பீட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பியந்த அமரசிங்க தலைமையில் நேற்று (22) வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஆறு பேர் போதைப் பொருள் குற்றப்பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டுவரும், அடையாளம் காணப்பட்ட இடங்களில் மோப் நாயின் உதவியுடன் தீடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Read More

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி கிராம மக்களுக்கு மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா மற்றும் மன்னார் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர். சுமார் 200 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Read More

இந்தியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட, தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் நேற்றையதினம் உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். 450 பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வாழும் சுமார் 750 இந்திய குடும்பங்களுக்கும், இந்திய ரூபா ஆயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. மொத்தம் 1200 பேருக்கு 50 இலட்சம் பெறுமதியான உலருணவுப் பொதிகள் தியாகியின் நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது யாழ்ப்பாண வர்த்தகர் திரு.சுதன் அவர்களும் உடனிருந்தார்.

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய நாட்களாக பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட 170 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் பெரண்டினா நிறுவனத்தின் மனிதாபிமான உதவி செயல் திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டது அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில் 63 குடும்பங்களுக்கும் புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 06 குடும்பங்களுக்கும் கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் 61 குடும்பங்களுக்கும் கருவேலகண்டல் கிராம அலுவலர் பிரிவில் 04 குடும்பங்களுக்கும் முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவில் 16 குடும்பங்களுக்கும் பேராறு கிராம அலுவலர் பிரிவில் 20 குடும்பங்களுக்குமாக 170 குடும்பங்களுக்கு இந்த உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குடும்பத்திற்கு தலா 4505 பெறுதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய ரூபா 765,850 பெறுமதியான பொருட்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக நிர்வாக…

Read More

வடக்கு மாகாண சபையை நிர்வகிக்க முடியாத நிர்வாக ஞானமற்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தான் முன்வைத்த தீர்வு என்ன என்பதை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றையதினம் (22.12.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், விக்னேஸ்வரன் தான் சமர்ப்பித்திருந்த விடயங்களை ஜனாதிபதி நடைமுறைப்படுத்தவில்லை ஆகவே தான் ஜனாதிபதி அழைத்து சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தன்னுடைய திட்டங்களை நாடாளுமன்றில் பிரேரணையாக சமர்ப்பித்து அது விவாதிக்கப்பட்டு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு பொறிமுறை என்பது அவர் அறியாத விடயமல்ல. தான் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை ஜனாதிபதியிடம் கொடுத்தவிட்டேன் அதை அவர்…

Read More

யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் யேசுபாலன் பிறப்பின் கிறிஸ்மஸ் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாநகரசபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.அன்ரன் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதில் முன் பள்ளி சிறார்களின் கிறிஸ்தவ கலைநிகழ்வுகள், நத்தார் நாடகமும், நத்தார் பாடல்கள் உள்ளிட்ட நிகழ்வும் இடம்பெற்றதுடன் புனித நத்தார் தாத்தாவின் ஆடல் பாடல் உடன் வருகை தந்த யுடன், சிறார்களின் ஆடல்பாடல்களும் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர சபை பிரதம கணக்காளர் ம.வசந்தமாலா, யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி த.பாலமுரளி, யாழ்ப்பாண மாநகர சபை பிரதம பொறியயிலாளர் இ.சுரேஸ்குமார், யாழ்ப்பாண மாநகர சபை பிரதி ஆணையாளர் வே.ஆயகுலன், யாழ்ப்பாண மாநகர சபை செயலாளர் த.தயாளன், யாழ்ப்பாண மாநகரசபை பிரதம நூலகர் சி.அனுசியா, மாநகர உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் கடந்த 12.12.2023 திகதியில் இருந்து 20.12.2023 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பெய்துவரும் கனமழை காரணமாக தொண்டமானாறு வாவி இன்று திறந்து வைக்கப்பட்டது. கனமழை காரணமாக தேக்கிவைக்கமுடிய மேலதிக நீரினை பெரும்கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. இதனை யாழ்ப்பாண மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் திறந்து விடப்பட்டன. குறித்த வாவியில் மீனவர்களால் மீன்பிடி ஈடுபட்டு வருகின்றனர்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன் சரிவராது என தோன்றியதால் விலகினோன் என தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழ் கட்சிகள் ஒருமித்து அழைத்தால் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறேன் என தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்ல இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயல்படும்போது சிலர் இவர் ரணிலின் ஆள் என்றனர். நான் யாருடைய ஆளுமல்ல தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என முயற்சி செய்தேன் அது நடைபெறவில்லை. நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தேடிச் செல்லவில்லை ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் பாராளுமன்றத்தில் என்னை அவர் சந்தித்தபோது இணைந்து செயல்பட வருமாறு…

Read More

மஸ்கெலியா பிரதேச சபை நிர்வாகத்திற்குட்பட்ட டங்கல் மேற் பிரிவு மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் கடந்த பலத்த சாத்தங்களாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக இத்தோட்டப் பகுதிக்கு செல்லும் பாதையானது குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருந்து வருவதன் காரணமாக நோயாளிகளை கொண்டு செல்வதில் மாத்திரம் அன்று பாடசாலைக்கு செல்லும் சின்னஞ்சிறு மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு தினமும் முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர். இத்தோட்ட பகுதியில் இருந்து சுமார் 8 km வரை நடந்து சென்றேன் தமது கல்வியை தொடர வேண்டிய துர்பாக்கிய நிலை இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் தினமும் மோசமான நிலையில் காணப்படும் பாதையின் ஊடாக கால் நடையாக பயணித்து தமிழ் கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1985 ஆம் ஆண்டு வரை இப்பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்று இயங்கி வந்த போதிலும் அதன் பிறகு எவ்வித காரணமுமின்றி குறித்த…

Read More

வவுனியா, பாவற்குளம் நீர்த் தேக்கத்திற்கு இளைஞருடன் சென்ற இளம் யுவதி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக உளுக்குளம் பொலிசார் இன்று (22.12) தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம் நீர்த்தேக்கமானது வான் பாய்ந்து வரும் நிலையில் குறித்த குளத்திற்கு இளைஞர் ஒருவருடன் இளம் யுவதி அங்கு சென்றுள்ளார். குறித்த நீர்த்தேக்கம் பகுதியில் நின்ற போது யுவதி நீரில் வீழ்ந்துள்ளார். சிலர் உடனடியாக விரைந்து செயற்ப்பட்டு யுவதியை மீட்டு, பாவற்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து குறித்த யுவதியின் சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்போது, வவுனியா, நாகர்இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜன்சிகா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இந்நிலையில் இன்று (22.12) மதியம் குறித்த சடலத்தை பார்வையிட்ட வவுனியா பதில் நீதவான் தி.திருஅருள், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன்,…

Read More