மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேவன் பிட்டி கிராம மக்களுக்கு மன்னார் நலன்புரிச்சங்கம் பிரித்தானியா மற்றும் மன்னார் நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் இணைந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
சுமார் 200 குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.