சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் 2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் மற்றையவர் 2 கிராம் 380 மில்லிக்கிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.