Author: Kalai

37 வயதான குறித்த பெண் நெல்லியடிப் பொலிஸாரால் இன்றையதினம் (20) கைதுசெய்யப்பட்டார். 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் 23,000 ரூபா பணமும் சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டநிலையில் குறித்த நபரை நாளை(20) வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதித்து பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.

Read More

தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இதுவரை 1514 குடும்பங்களைச் சேர்ந்த 5160பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வெள்ளப்பெருக்கு காரணமாக கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 241 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 63 குடும்பங்களைச் சேர்ந்த 215பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 259பேரும், பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 712பேரும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 654 குடும்பங்களைச் சேர்ந்த 2264பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 117 குடும்பங்களைச் சேர்ந்த 439பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 42 குடும்பங்களைச் சேர்ந்த 144பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 79 குடும்பங்களைச் சேர்ந்த 260பேரும், யாழ்ப்பாண பிரதேச…

Read More

ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில்ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்புக்குநாளை வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலளித்து அனுப்பிய கடிதத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற மிக முக்கியமான விடயம் தொடர்பில் ஜனாதிபதியால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்தாமல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடுவதன் மூலம் எந்தவொரு பயனுள்ள நோக்கமும் நிறைவேறாது என்பதே எனது கருத்தாகும். ஆகவே, நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதியால் அழைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். எனது முடிவை ஐனாதிபதிக்கு தெரிவிக்கவும் – என்றுள்ளது.

Read More

யாழ்ப்பாண மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் 886 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். தற்போதய டெங்கு நிலமை தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்டத்தில் காணப்படும் அரச நிறுவனங்களிலேயே அதிகளவில் டெங்கு பரவும் அபாயம் நிலவுவதாகவும் இதனை கருத்திற்ககொண்டு நாளை அரச நிறுவனங்களில் விசேட டெங்கு கட்டுபாடு செயற்றிட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

Read More

கொக்குவில் நந்தாவில் பகுதியிலும் யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின்,போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கைது செய்யப்பட்ட 15 பேரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த 15 பேரில் ஆறு பேர் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தென்னிலங்கை மாணவன் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாணவனை கைது செய்து சோதனையிட்ட போது , போதை பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை அடுத்து மாணவனை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துன்னார்.

Read More

பாலநாதன் சதீஸ்முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரவு வேளை வீதியால் நடந்து சென்றபோது அதே கிராமத்தினை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காரில் கம்பிகளுடன் வந்து தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் குமுழமுனை கிராமத்தினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் வலது கை , வலது காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று (20) மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் மதுபோதையில் வந்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய சென்றும் முறைப்பாட்டினை வைத்தியசாலையிலுள்ள பொலிஸார் மேற்கொள்ளுவார்கள் அத்தோடு அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியிருந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும்…

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மழை சற்று குறைவாக காணப்படுகின்ற நிலைமையில் வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றதனால் இடைத்தங்கல் முகாம்களில் இருந்த மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையிலே ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் புளியங்குளம் பண்டாரவன்னி கூழாமுறிப்பு பேராறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கி இருந்த மக்கள் நேற்று (19) மாலை முதல் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று வீடுகளை துப்புரவு செய்து வீட்டினுள் வசித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளான குடிநீர் மலசல கூட வசதிகளை பாவிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் கிணறுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளமையினால் நீரை பருக முடியாத நிலையிலும் நீர் தேங்கியுள்ள நிலையில் மலசல கூடங்களை பாவிக்க முடியாத நிலைகளும் இடங்களில் காணப்படுகிறது. வீடுகளுக்குள் இருந்த…

Read More

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் இன்று புதன்கிழமை (20) காலை மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18, ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதன்போது கைப்பற்றப்பட்ட போதை வில்லைகளின் பெறுமதி 21 லட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களும்,போதை வில்லைகளும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

Read More

இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து பிறப்பின் மகிமையில் நாம் எதனை பின்பற்றுகின்றோம் என்பதனைப்பற்றி உரையாற்றினார். இதன்போது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி, கிறிஸ்மஸ் தாத்தாவின் ஆடல் பாடல் ,சிறார்களின் ஆடல்பாடல்கள் என்பன இடம்பெற்றன. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வாளர் ம.கமலரூபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் எற்பாட்டில் கிறிஸ்து பிறப்பின் ஒளிவிழா இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தலைவர் இ.சுரேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இவ்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் கலந்து கொண்டதுடன், கிறிஸ்து பிறப்பின் மகிமையில் நாம் எதனை பின்பற்றுகின்றோம் என்பதனைப்பற்றி உரையாற்றினார். இதன்போது கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி, கிறிஸ்மஸ் தாத்தாவின்…

Read More