Author: Kalai

வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போது தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள குளங்களிற்கான நீர் வரத்து அதிகரித்தமையினால், பெரும்பாலான குளங்கள் வான் பாய்கின்றது. குறிப்பாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள 620 குளங்களில் 456 குளங்களும், மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 17 குளங்களும், மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் 06 குளங்களும் வான் பாய்கின்றதாக மேலும் தெரிவித்தனர். இதேவேளை பாலிக்குளம், சின்னசிப்பிகுளம், தேகக்கம்குளம், பிரமநாலங்குளம், பரயநாலங்குளம் உட்பட 64 குளங்கள் உடைப்பெடுத்த நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களம், இராணுவம், கிராமமக்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து குளத்தினை மறுசீரமைத்தமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்கிறது – 64 குளங்கள் உடைப்பு வவுனியாவில் 479 குளங்கள் வான் பாய்வதுடன் இதுவரை 64 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…

Read More

எதிர்கால முயற்சியாளர்களை தேடும் அழகிய ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவர்களிற்கு இடையே இடம்பெற்ற சித்திரம் மற்றும் கட்டுரைப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வானது இன்றையதினம் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த போட்டி நிகழ்வானது இடம்பெற்றிருந்தது. இதன்போது வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தரம் 06 தொடக்கம் உயர்தர பாடசாலை மாணவர்களிடையே குறித்த போட்டியானது இடம்பெற்றதுடன் இதில் வெற்றிபெற்ற 60 மாணவர்களிற்கான பரிசில்கள் பிரதம விருந்தினர்களால் வழங்கப்பட்டதுடன், வறுமைக்கோட்டிற்குட்பட்ட40 மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. வவுனியா மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உதவி பணிப்பாளர் தமயந்தி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், மாவட்ட பிரதி திட்டமிடல்…

Read More

வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு புதிய வீட்டுத் திட்டத்துடன் காணி வழங்க ஆராயவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த போது, மக்களிடம் இவ்வாறு தெரிவித்தார். இன்று காலை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலை மற்றும் கண்டாவளை மாகாவித்தியாலயம் ஆகியவற்றில் தங்கியுள்ள மக்களை சந்தித்தார். இதன்போது கண்டாவளை பிரதேச செயலாளர் T. பிருந்தாகரன், கிராம சேவையாளர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்றிருந்தனர். இதன்போது மக்களின் வெள்ள அனர்த்தம் ஏற்படும் பகுதியில் உள்ள மக்களின் பாதிப்புக்களை நிவர்த்தி செய்யும் வகையில், புதிய வீட்டுத்திட்டத்துடன் பாதுகாப்பான இடத்தில் காணி வழங்க மக்களின் விருப்பத்தை கேட்டறிந்தார். மேலும், குளத்தின் நீர்மட்டத்தை மேலும் குறைத்து அனர்த்த பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளமையால், தொடர்ந்தும் சில நாட்கள் வெள்ள நிலைமைகளை அவதானித்து வீடுகளுக்கு செல்லுமாறும் அவர் மக்களிடம் தெரிவித்தார். அனர்த்த பாதுகாப்புக்காக தஞ்சம்…

Read More

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி பெற்று , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். குறித்த இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு இருந்தனர். விசாரணைகளின் பின்னர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்திய பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் ,…

Read More

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள், நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள் என்பன ஏற்படுவதன் காரணமாக நேற்று செவ்வாய் கிழமை(19)தொடக்கம் பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (PASS) மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு நோயாளருக்கு தலா இரு அனுமதிப்பத்திரம் எனும் அடிப்படையில் நோயாளரை அனுமதிக்கும் பகுதியில் பெற்றுக் கொள்ள முடியும். சிறப்பான நோய்ப்பராமரிப்பு வழங்குவதனை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த ஒழுங்கு முறைக்கு அனைத்து பார்வையாளர்களும் ஒத்துழைப்பினை வழங்கும்படி கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி W.B.M.A .அமரசிங்க அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (19) சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட பொலிஸ் அணி மற்றும் விசேட அதிரடிப் படையினர் வீட்டிலே 914 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த 34 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர் கைதுசெய்யப்பட்டவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிசார் அவர் வேறு ஒரு இடத்தில் இருந்து கஞ்சா பெற்றுக் கொள்வதை அறிந்துள்ளனர் இதனைத் தொடர்ந்து குறித்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் அணியினரும் விசேட அதிரடி படையினரும் குறித்த நபரை கைது செய்வதற்காக சென்றபோது முள்ளியவளை புதரிகுடா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய கணவன் மனைவி இருவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வைத்து 214 கிராம் கஞ்சாவுடன்…

Read More

மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கம் UK இனால் நேற்றைய தினம் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. -மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு மற்றும் ஈச்சளவக்கை ஆகிய கிராம மக்களுக்கு உதவிகள் தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மன்னார் நலன்புரி சங்கம் UK துரித நடவடிக்கைகளை முன் னெடுத்தது. அதற்கு அமைவாக மன்னார் நலன்புரி சங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விவரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை முன்னெடுத்தனர். இதன் போது குறித்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Read More

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதுஇறந்த நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய பொலிஸார், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிலர் மரண விசாரணையில் சாட்சியம் வழங்கினர். இதேவேளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த முன்னர்உயிரிழந்தவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெல்லிப்பழை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரை அனுமதித்தமை தொடர்பான மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்க ஆவண செய்யுமாறு நீதிமன்ற பதிவாளருக்கு யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டார். மரண விசாரணை தொடர்பான கட்டளைக்காக எதிர்வரும் ஜனவரி 2ம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் உயிரிழந்த இளைஞன் சார்பில் பெருமளவான சட்டத்தரணிகள் ஆஜராகினர். வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் நவம்பர் 19ஆம் திகதி உயிரிழந்தார். ReplyReply to allForward

Read More

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இறுதி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் இன்று (19.12.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாடு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டு வரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. நீர்ப்பாசன குளங்களின் தற்போதைய நிலைமைகள், காலபோக பயிர்ச் செய்கை, துறை சார்ந்து தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. இதனைவிட நெற்செய்கையில் வெண்முதுகு தத்தி குறுகிய காலத்தில் கூடுதலான தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விளக்கமளித்திருந்தனர். வெண்முதுகு தத்தி பரவலுக்கு தொடர்ச்சியாக நீருள்ள வயல்களிலும், அதிக நிழல் மற்றும் அதிக சாரீரப்பதனுள்ள வயல்களிலும் ஏற்படுகின்றது, நெருக்கமான / தாவர அடர்த்தி கூடிய நைதரசன் பாவனையுள்ள பயிரின் ஆரம்ப வளர்ச்சி காலங்களில் அதிகூடிய பீடைநாசினி பாவனை முதலானவை சுட்டிக்காட்டப்பட்டன.…

Read More

மன்னார் கரிசல் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் கல்வி கற்கும் பாடசாலை அதிபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (17) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது பாடசாலை சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு என அறிவித்து குறித்த மாணவனை அழைத்து அதிபர் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மாணவன் பெற்றோருக்கு அறிவித்த நிலையில் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். மறுநாள் திங்கட்கிழமை (18) பெற்றோர் பாடசாலை சென்ற நிலையில் அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை . இந்த நிலையில் அப்பகுதியில் இயங்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாடசாலை அதிபர் மற்றும் மாணவனை அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் குறித்த மாணவனின் குடும்பத்தினர் எருக்கலம் பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் அங்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு இல்லை என அறிவிக்கப்பட்டு…

Read More