Author: Kalai

வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நோக்கில் சர்வதேச அரிமா கழகத்தினால் ஆயிரம் பொதிகள் ஆளுநரின் உதவிச் செயலாளர் ஜி.ஏகாந்தனிடம் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது ஐனாதிபதியின் வடக்கு விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் இளங்கோவன், ஆளுநர் செயலக அதிகாரிகள், வடமாகாண அரிமாக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். குறித்த பொதிகள் விரைவில் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Read More

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் புனரமைப்பு செய்யப்பட்ட கலந்துரையாடல் மண்டபமானது சிறைச்சாலை ஆணையாளர் காமினி.பி.திசாநாயக்கவினால் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது. தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரனின் நிதி அனுசரணையில் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது தியாகி அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் குழந்தைகளுக்காக கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தியாகி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் வாமதேவா தியாகேந்திரன், யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார்,யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Read More

யாழ் மாவட்ட செயலகத்தின் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் கடந்த வாரம் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள பல வியாபார மையங்களில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது அவ் வேளையில் வியாபாரிகளினால் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத மற்றும் நடப்பாண்டில் முத்திரை பதிக்கப்படாத நிறுக்கும் கருவிகளை பயன்படுத்திய வியாபாரிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அத்துடன் இனிவரும் காலங்களில் நிறுவை அல்லது அளவை, நிறுக்கும் அல்லது அளக்கும் உபகரணங்களை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தும் வியாபார நிலையங்களையும் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்எனவும் அறிவித்துள்ளனர்

Read More

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி விரத சிறப்புபூஜை வழிபாடுகள் இடம்பெற்றன . இவ் உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடவரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இடம்பெற்றதுடன் காலை 06.00 மணிக்கு ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள், சீதேவி, பூமாதேவி, ஆகிய தெய்வங்களாக்கு விஷேட ஆராதணைகள் இடம் பெற்றன. இவ் உற்சவ கிரியைகளை ஆலயபிரதம செ.ரமணீதரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர். இவ் உற்சவத்திற்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்த அடியார்கள் இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

Read More

நீடித்து நிற்கும் நிலைபேறான அபிவிருத்தி திட்டங்களை உரிய முறையில் கண்காணிப்பதற்கு பிரதேச மட்டக் குழுக்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சொண்ட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செந்தூர்ராஜா தெரிவித்தார் . யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம் பெற்ற புத்திஜீவிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான நீடித்தது நிற்கும் நிலையான அபிவிருத்தி திட்டங்களை கண்காணிப்பதற்கான மாவட்ட மட்ட குழு அங்குராப்பன நிகழ்வுகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த காலங்களில் நிர்மாண அபிவிருத்தியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பது தொடர்பில் ஏற்கனவே இடம் பெற்ற எமது கலந்துரையாடல்களில் கூறப்பட்டது. அது தொடர்பில் கவனம் செலுத்திய சொண்ட் நிறுவனம் ஏனைய ஒன்பது நிறுவனங்களையும் பங்குதாரர்களாக இணைத்து மக்களுக்கான அபிவிருத்திகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு எமது ஆலோசனைகளை வழங்கவுள்ளோம். எமது மாவட்ட மட்டக் குழுவில் ஓய்வு பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்கள் , ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்ற பொறியாளர்கள் உற்பட…

Read More

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம். “வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14 ) என திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இறைமகன் இயேசு குழந்தையாக அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் இயேசு என்றும் எம்மோடு இருக்கிறார் என்பதை கிறிஸ்மஸ் பண்டிகை உணர்த்துகின்றது. அந்தவகையில், இயேசு கிறிஸ்து தன் பிறப்பின் ஊடாக கொண்டுவந்த விடுதலையை, மீட்பை அனைவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதுவே உண்மையான மகிழ்ச்சி. ஆகவே இந்த கிறிஸ்மஸ் விழாவானது துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவருக்கும் விடுதலை தருவதாக அமைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திக்கின்றோம். பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல…

Read More

தருமபுர போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர் உட்பட தடையப் பொருட்களும் பொலிசாரல் மீட்பு அத்துடன்”சந்தேக நபரிடமிருந்து 45 லிட்டர் கசிப்பும் பதில் இரண்டு லிட்டர் கோடாவும் மற்றும் 11 டின் பியர் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய 23.12.2023 தினம் கிளிநொச்சி நீதிமன்றல் முட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்

Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் இன்றையதினம் காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் துணுக்காய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது இதில் துணுக்காய், ஜயங்குளம், புத்துவெட்டுவான், கோட்டைகட்டிய குளம் பகுதி மக்கள் இ‌ன்றைய தினம் வருகை தந்திருந்தனர் இறுதி யுத்த கால பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்த சந்தர்ப்பத்தில் வந்து சாட்சியம் அளித்து ஆவணங்களை வழங்கி இருந்தனர். இதிலே கருத்து தெரிவித்த காணாமல் போனோரின் உறவுகள் தமக்கு இழப்பீடுகள் எதுவும் தேவையல்ல என்றும், இதேவேளை தமக்கு இறப்பு சான்றிதழ்களை வழங்க அவர்கள் எத்தனிப்பதாகவும் தெரிவித்த அவர்கள், தமக்கு தமது உறவுகளை தருமாறே கூறியுள்ளோம் என தெரிவித்தனர். இதேவேளை கருத்துரைத்த காணாமல் ஆக்கப்டோருக்கான அலுவலகர் தமக்கு இதுவரை 21,000 த்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் 5000 முறைப்பாடுகள் இராணுவ முப்படைகள் உடைய முறைப்பாடுகள் எனவும், அதிலும் இரட்டிப்பு செய்யப்பட்ட முறைப்பாடுகளாக 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் பூர்வாங்க…

Read More

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை(20) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைதான 8 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த மீனவர்கள் இன்று (20) புதன்கிழமை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டனர். இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் ‘ நிபந்தனையின் கீழ் அவர்களை விடுதலை செய்தார். இதனைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Read More

வவுனியா மன்னார் வீதியில் அங்காடி வியாபாரி ஒருவர் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டமையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலை வவுனியா மன்னார் வீதி காமினி மகாவித்தியாலய பாடசாலை அருகே இடம்பெற்றது. இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் இவ்வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டளைக்கமைவாக வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் அங்காடி வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இதன் முதற்கட்டமாக அரச அலுவலகங்களிற்கு முன்பாக காணப்படும் அங்காடி வியாபார நிலையங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக நகரசபையினால் ஒலிபெருக்கி மூலமாக நேற்றையதினம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றையதினம் புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு, காமினிமகாவித்தியாலைய வீதிகளில் அறிவுறுத்தலை மீறி அரச அலுவலகங்களிற்கு முன்பாக காணப்பட்ட அங்காடி வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு வவுனியா காமினி மகாவித்தியாலையத்திற்கு முன்பாக காணப்பட்ட சோளம் விற்பனை செய்யும் இடத்தினை அகற்ற முற்பட்ட…

Read More