Author: Kalai

இன்றையதினம் காக்கைதீவு பகுதியில் பெருமளவான மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மீன்பிடி படகு ஒன்றில் இருந்து இந்த மஞ்சள் மூடைகள் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட மஞ்சள் மூடைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Read More

வவுனியா மாவட்டத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக 238 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார். வவுனனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் 5 ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையானது ஆரம்பித்து 5 வருடத்தை பூர்த்தி செய்கிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காணிப் பிணக்குளுக்கு தீர்வு காண்பதற்காக காணி மத்தியஸ்தர் சபைகள் உருவாக்கப்பட்ட போதும், தற்போது 16 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. ஏனைய மாவட்டங்களில் உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. காணிப் பிணக்குகள் சிக்கல் நிறைந்தவை. அவற்றை நேர்த்தியாக கையாள வேண்டும். அந்த வகையில் வவுனியா மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையில் கடந்த…

Read More

போயா விடுமுறை தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாண. நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றமூவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட போலீஸ் அத்தியாவசியின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண மாவட்ட போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து யாழ்ப்பாணம் கஸ்தூரியர் வீதி கலட்டி மற்றும் முலவை சந்திப்பகுதியில் நடாத்திய தேடுதலின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 117 கால் போத்தல்களும் 9 பெரிய சாராயப் போத்தல்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது-

Read More

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார். இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும், விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

நடிகர் வடிவேலு செய்த மோசமான விஷயங்கள் குறித்து சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மறைந்த நடிகர் போண்டா மணியை நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார் வடிவேலு. இதற்கு என்ன காரணம், ஏன் எப்படி நடந்தது என்று பார்க்கலாம். நடிகர் போண்டா மணி தான் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அந்த சமயத்தில் தான் வடிவேலு – சிங்கமுத்து சண்டை மிகப்பெரிய அளவில் பிரச்சனையாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் போண்டா மணி கூறியது பெரும் தலைப்பாக பல முன்னணி பத்திரிகைகளில் வந்துவிட்டது. போண்டா மணி எதார்த்தமாக கூறிய இந்த விஷயத்தை படித்துவிட்டு, இரவு 2 மணிக்கு போன் கால் செய்து போண்டா மணியை உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டியுள்ளார் வடிவேலு. இதனால் வடிவேலுவுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு…

Read More

செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது ஹவுதி கிளா்ச்சியாளா்களால் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று (23) இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க இராணுவம் தனது ‘எக்ஸ்’ தளத்தில் மறுநாள் (24) பதிவொன்றினையும் வெளியிட்டிருந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, “கடந்த சனிக்கிழமை ஏமனில் உள்ள ஹவுதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இருந்து செங்கடலில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் கபோன் நாட்டுக்குச் சொந்தமான ‘எம்வி சாய்பாபா’ என்ற கப்பல் தாக்குதலுக்குள்ளானது, அந்தக் கப்பலில் கச்சா எண்ணெய் ஏற்றி வரப்பட்டுள்ளது, மாத்திரமல்லாது, அதில் இந்தியக் கொடி பறந்தது. அதிஷ்டவசமாக ட்ரோன் தாக்குதலினால் கப்பலில் இருந்தவா்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து, இந்திய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, தாக்குதலுக்குள்ளான ‘எம்வி சாய்பாபா’ கப்பலில் இருந்த 25 மாலுமிகளும் இந்தியா்கள், இவர்களில் எவருக்கும்…

Read More

யாழ்.நகர் பகுதியில் , யாழ் மாநகர சபையினால் வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கப்படுவதால் , தமது வியாபர நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.வணிகர் கழகம் கவலை தெரிவித்துள்ளது. அதேவேளை யாழ்.மாநகர சபையின் கட்டண வசூலிப்பால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதுடன் , பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக பொது மக்கள் நீண்ட காலமாக விசனம் தெரிவித்தும் வருகின்றனர். யாழ்.நகர் பகுதியில் குறிப்பாக வைத்தியசாலை வீதி , மின்சார நிலைய வீதி மற்றும் கஸ்தூரியார் வீதிகளில் துவிச்சக்கர வண்டிகள் , மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துபவர்களிடம் தரிப்பிட கட்டணம் அறவிடப்படுகிறது. அவை வாகனங்களுக்கான பாதுகாப்பு கட்டணம் அல்ல, வாகனத்தை நிறுத்துவதற்கான தரிப்பிட கட்டணம் என கூறியே அறவிடப்படுகிறது. அதவாது வாகனம் காணாமல் போனாலோ, வாகன பாகங்கள் காணாமல் போனாலோ அதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல. துவிச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபாயும் , மோட்டார் சைக்கிள்களுக்கு 30 ரூபாயும் அறவிடப்பட்டு வருகின்றன. அவ்வாறு அறவிடப்படும் போது மிகுதி பணம் இல்லை என…

Read More

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடும் வெள்ளம் காரணமாகவும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக பலர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கண்டாவலைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் மழை முடிந்தும் தமது பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வடிந்து ஓட முடியாத நிலையில் தற்பொழுது கூட இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாத நிலையில் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தமது பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீர் காரணமாக டெங்கு நோய் பரவும் அபாய நிலையில் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் அத்தோடு மேலும் சிலர் தெரிவிக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக சிலரது கிணறுகளில் வெள்ள நீர் மூடி பாய்ந்ததன் காரணமாகவும் சிலரது கிணறுகள் பகுதி அளவிலும் முற்று முழுதாகவும் கிணறுகள் அழிவு…

Read More

வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான இன்று உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து அவர்கள் அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர். இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார், நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின்…

Read More

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் காணப்படும் விவசாயம் ,மீன் பிடிதொடர்பிலான பிரச்சினைகளை ஆராய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி சனிக்கிழமை (23) கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விவசாய சம்மேளனங்களின் வேண்டுகோளை ஏற்று குறித்த விஜயத்தை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார். இலந்தைக்குளம்,குச்சவெளியான் குளம் புனரமைப்பு மற்றும் அனுமதிப்பத்திரமுள்ள வயல் காணிகளை விடுவிப்புச் செய்து தருமாறும் விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.மீன் பிடி தொடர்பில் ஜாயா நகர் சல்லி முனைப் பகுதியில் இறங்கு துறை அமைப்பது பற்றியும் மீனவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.மகா ஆலங்குளத்திலிருந்து குச்சவெளி விவசாய செய்கைக்கான நீர்ப்பாசன விரிவுபடுத்தல் நெற்செய்கை நோய் தாக்கம் போன்ற பல விடயங்களை விவசாயிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைத்தனர் இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத் தருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் விவசாயிகளிடத்தில் தெரிவித்தார். இதில் மாவட்ட மேலதிக அரசாங்க…

Read More