நடிகர் வடிவேலு செய்த மோசமான விஷயங்கள் குறித்து சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
மறைந்த நடிகர் போண்டா மணியை நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார் வடிவேலு. இதற்கு என்ன காரணம், ஏன் எப்படி நடந்தது என்று பார்க்கலாம். நடிகர் போண்டா மணி தான் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலுவும், சிங்கமுத்துவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அந்த சமயத்தில் தான் வடிவேலு – சிங்கமுத்து சண்டை மிகப்பெரிய அளவில் பிரச்சனையாக ஓடிக்கொண்டு இருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் போண்டா மணி கூறியது பெரும் தலைப்பாக பல முன்னணி பத்திரிகைகளில் வந்துவிட்டது.
போண்டா மணி எதார்த்தமாக கூறிய இந்த விஷயத்தை படித்துவிட்டு, இரவு 2 மணிக்கு போன் கால் செய்து போண்டா மணியை உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தி திட்டியுள்ளார் வடிவேலு.
இதனால் வடிவேலுவுடன் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு பறிபோய்விடுமோ என நினைத்து ஷாக்கான போண்டா மணி உடனடியாக கிளம்பி வடிவேலு வீட்டிற்கு அதிகாலை 6 மணி சென்றுள்ளார் போண்டா மணி. 6 மணி 7 மணி ஆனது 7 மணி 8 மணி ஆனது, இறுதியாக 10 மணிக்கு போண்டா மணியை வடிவேலு சந்தித்துள்ளார்.
வடிவேலுவை பார்த்தவுடன் ஓடி போய், நான் செய்தது தவறு என்னை மன்னித்து விடுங்கள் அண்ணா என கூறி காலில் விழுந்துள்ளார். காலில் விழுந்து நடிகர் போண்டா மணியின் நெஞ்சில் தனது கால்களால் எட்டி உதைத்துள்ளார் வடிவேலு. இப்படி கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நடந்துகொண்டுள்ளார். இந்த விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.