இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை பாதிப்படைந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தேமுதிகவின் பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைபெற்று பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த். தமிழக அரசியல் களத்தில் இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் தொண்டர்களும் மீண்டும் தங்களின் கட்சி பெரும் எழுச்சியை சந்திக்குமா? என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “கட்சி தொண்டர்கள், விஜயகாந்த் ஆகியோரின் ஆணைக்கிணங்க பதவி ஏற்றுள்ளதாக கூறி, கேப்டன் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது பொதுச் செயலாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை கேப்டன் கொடுத்துள்ளார் என்று கூறினார்.
மேலும், கட்சி தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல் அன்னையாகவும் பயணித்துக்கொண்டு இருப்பதாக கூறிய பிரேமலதா, விஜயகாந்த் வழிநடத்தல்படிதான் தேமுதிக தொடர்ந்து இயங்கும்” என்று கூறினார்.
விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர் தான் ரோல் மாடல், என்றும் அதேபோல ஒரு பெண் தலைவராக தனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா தான் என்று அதிரடியாக தெரிவித்த பிரேமலதா, அவரின் தன்னம்பிக்கையும் தைரியமும் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக்குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தேமுதிகவில் பெண்களுக்கு அதிகமான பொறுப்புகளை அறிவிக்க இருக்கிறோம் என்று கூறி, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விஜயகாந்த் யாருக்கெல்லாம் MLA பதவி கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் முதுகில் குத்தி துரோகம் செய்து விட்டார்கள் என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்து அந்த வலிதான் விஜய காந்துக்கு உடல்நிலை மோசமாக காரணமாகவும் இருந்தது” என்றார்.