ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இடம் (14) பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுற்றுலாப் பணியக தவிசாளர் ஏ.பி.மதனவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .