இன்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராசாவின் தோட்ட வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 416 கால் போத்தல் (104 முழு போத்தல்கள்) சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக இவ்வாறு பதுக்கி வைத்திருந்தபோது குறித்த சாராய போத்தல்கள் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் பரிசோதகரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.