Author: ampalam

வட மாகாணத்தில் அதிகூடியதாக வவுனியா மாவட்டத்தில் 1253 பேருக்குக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரன் அவர்களின் முயற்சியினால் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து இம்மாதம் பதினோராம் திகதி ஆரம்பமான சத்திர சிகிச்சை முகாம் 21 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது. 1253 பேர் கண் சத்திர சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். கடந்த 11 ஆம் திகதி 188 பேரும், 12 ஆம் திகதி 230 பேரும், 13 ஆம் திகதி 172 பேரும், 14 ஆம் திகதி 153 பேரும், 18 ஆம் திகதி 172 பேரும், 19 ஆம் திகதி 56 பேரும், 20 ஆம் திகதி 157 பேரும், 21 ஆம் திகதி 125 பேரும் என கடந்த 8 நாட்களில் 1253 பேருக்கு கண் சத்திர சிகிச்சை…

Read More

இலங்கை டெலிக்கும் நிறுவனத்தினை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இன்றைய தினம்22.12.2023 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றே முன்னெடுத்திருந்தனர் அந்த வகையில் கிளிநொச்சி டெலிகம் நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் முல்லைத்தீவு டெலிக்கம் நிறுவனத்தின் பணியாளர்கள் இணைந்து இன்றைய தினம் கிளிநொச்சி 55 ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள டெலிக்கம் நிறுவனத்தின் மூன்றாளில் இன்றைய பனி பகீஸ்க்கரிப்பில் ஈடுபட்டதுடன் டெலிகாம் நிறுவனத்தினை தனியாருக்குவிற்பனை செய்வதன் மூலம் தாம் தற்பொழுது பணியாற்றி வரும் டெலிக்கும் நிறுவனத்தில் உள்ள பலர் தொழில் வாய்ப்பை இழந்து தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்து அத்துடன் தமக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள் உடன் வழங்க வேண்டும் எனவும் தனியாருக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்து டெலிக்கம் நிறுவனம் தற்பொழுது நட்டத்தில் இயங்கவில்லை சிலர் வேண்டுமேன்றே நட்டத்தை ஏற்படுத்திக்காட்டுகின்றனர் எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னேடுத்தி…

Read More

ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள ஏனைய பணய கைதிகளையும் விடுவிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. புதிய யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின் நெட்டன்யாஹு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஹமாஸ்சிற்கு எதிரான போரானது அழுத்தம் மற்றும் செலவுகள் நிறைந்தது என்ற போதிலும் வெற்றிக்காக போராட வேண்டும் எனவும் பெஞ்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

Read More

அரபிக் கடல் பகுதியில் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு சோமாலியா கொண்டு செல்லப்பட்ட மால்டா நாட்டு சரக்கு கப்பலை இந்திய கடற்படை கப்பல் இடைமறித்துள்ளது. அதேவேளை, அந்த கப்பலை கொள்ளையர்களிடம் இருந்து மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. கடந்த வியாழக் கிழமையன்று அரபிக் கடல் பகுதியில் 18 பேருடன் சென்று கொண்டிருந்த மால்டா நாட்டு சரக்கு கப்பலை (எம்.வி.ரூன் ) 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாக அவசர அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் அரபிக் கடல் பகுதியில் எம்.வி ரூன் சரக்கு கப்பலை தேடும் பணியில் ஈடுபட்டது. நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட கப்பலை கடற்படை விமானம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எம்.வி.ரூன் கப்பல் சோமாலியாகடல் பகுதியில் புன்ட்லேண்ட் பகுதியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படை கப்பலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரோந்து…

Read More

உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டிடமான இந்தியாவிலுள்ள சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் விளங்குகின்றது. இங்கு உலகின் 90 சதவீத வைரங்கள் பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகின்றது. இந்த தலைநகரில் வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரம் செய்தல் என்பவற்றில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read More

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான் நாடுகளின் தூதுவர்களும் தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாணம் வருகை தந்தனர். இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் இன்று காலை 10.00 நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்தனர். சுவிஸ்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Dr. Siri Walt), ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகொஷி ஹிடேகி (MIZUKOSHI Hideaki) மற்றும் தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ் தானிகர் சாண்டைல் எட்வின் ஷால்க் (Sandile Edwin Schalk) ஆகியோர்கள் 10 பேர்கள் கொண்ட குழுவினர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் தேசிக ஞானசம்பந்த பிரமாச்சாரி சுவாமிகளையும், தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ஆன்மீக சமயத்தலைவர் ரிசி தொண்டு ஞான சுவாமிகளையும் சந்தித்தனர். இதன் போது வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சமயரீதியான நல்லிணக்க விழிப்புணர்வுகள், சமயத்தலைவர்களினால் எதிர்நோக்கும் மக்கள் ரீதியான பிரச்சனைகள்,…

Read More

கணவனை மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார். அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். இதன்போது அவரை காப்பாற்றிய ஊரவர்கள் யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More

இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை பாதிப்படைந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். தேமுதிகவின் பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடைபெற்று பொதுக்குழு கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த். தமிழக அரசியல் களத்தில் இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் தொண்டர்களும் மீண்டும் தங்களின் கட்சி பெரும் எழுச்சியை சந்திக்குமா? என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “கட்சி தொண்டர்கள், விஜயகாந்த் ஆகியோரின் ஆணைக்கிணங்க பதவி ஏற்றுள்ளதாக கூறி, கேப்டன் மனைவியாக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது பொதுச் செயலாளர் என்கிற மிகப்பெரிய பொறுப்பை கேப்டன் கொடுத்துள்ளார் என்று கூறினார். மேலும், கட்சி தொண்டர்களுக்கு அண்ணியாக மட்டுமல்லாமல் அன்னையாகவும் பயணித்துக்கொண்டு இருப்பதாக கூறிய பிரேமலதா, விஜயகாந்த் வழிநடத்தல்படிதான் தேமுதிக தொடர்ந்து இயங்கும்” என்று கூறினார். விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர் தான் ரோல் மாடல், என்றும் அதேபோல ஒரு பெண் தலைவராக தனக்கு…

Read More

மன்னாரில் நேற்றைய தினம் மதியம் முதல் இன்று அதிகாலை வரை பெய்த கடும் மழை காரணமாக கட்டுக்கரை குளம் வான் பாய ஆரம்பித்துள்ள துடன் மன்னார் -யாழ்ப்பாணம் பிரதான வீதி உள்ள பாலியாறு பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக பாலியாறு, சிப்பியாறு, முழுவதும் நிறைந்து வீதிக்கு மேலாக நீர் பாய்ந்து வருவதுடன் அருகில் உள்ள கிராமங்கள் முழுவதும் வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. மேலும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆட்காட்டிவெளி மற்றும் மாந்தை கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள வயல் நிலங்கள் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது . அதே நேரம் மன்னார் பிரதேச செயலக பிரிவில் கடும் மழை காரணமாக ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், சாந்திபுரம் போன்ற கிராமங்களும் தீவுக்கு வெளியில் தேத்தாவட, தேவன் பிட்டி, மூன்றாம் பிட்டி போன்ற கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவும் பட்சத்தில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர…

Read More

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் இன்றையதினம் (15) மீட்கப்பட்டது. கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கதிர்காமநாதன் நிரோசன் (வயது 29) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் கடந்த 13ஆம் திகதி 4மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞனை உறவினர்கள் தேடி வந்த நிலையில் தோட்டக் கிணற்றில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Read More