Author: Kalai

வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் நீரினை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆளுனர் பணிப்பு வவுனியாவில் மக்களை பாதிக்கும் வகையில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினை வெளியேற்ற உள்ளூராட்சி மன்றங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கோள்ளுமாறு வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள பருவமழை காரணமாக வடக்கு மாகாணத்தின் நிலைப்பாடு தொடர்பில் 5 மாவட்டங்களிகன் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டது. அதற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பில் வடமாகாண ஆளுனரால் மாவட்ட அரச அதிபருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேங்கி கிடக்கும் நீரை சுத்தப்படுத்தும் பணியை உள்ளூராட்சி திணைக்களத்தை மேற்கொள்ளுமாறும், நீர் வழிந்தோடாத வகையில் அனுமதியின்றி வேலி சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பின் உள்ளூராட்சி அலுவலக உத்தியோகத்தர்களால் துளையிடப்பட்டு நீரை வெளியேற்றுமாறும் குறிப்பிட்டுள்ளதுடன், இதன்போது குறிப்பிட்ட பகுதிகளின் கிராம அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் சம்பவ இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Read More

வவுனியா பூந்தோட்டம் லக்ஷ்மிசமேத நரசிங்கர் ஆலயத்தின் கல்வி சமூக அபிவிருத்தி நிதியத்தின் ஏற்ப்பாட்டில் இலவசக்கற்றல் வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு நரசிங்கர் ஆலய கலாசாரமண்டபத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது வறிய குடும்பங்களை சேர்ந்த 125 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன், மேல்வகுப்பு மாணவர்களுக்கான இலவசக்கற்றல் வகுப்புக்களும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஆலயத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மேலதிக மாவட்டசெயலாளர் தி.திரேஸ்குமார் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேசசெயலாளர் நா.கமலதாசன், பொலிஸ்பொறுப்பதிகாரி ஜெயக்கொடி,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், பொதுமக்கள்,மாணவர்கள் என

Read More

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரையோரப் பிரதேசத்தின் செந்தூர் பிரிவில் கடல் மட்டி சேகரிப்பினை தங்களது பிரதான வாழ்வாதாரமாக கொண்ட 60 பெண் பயனாளிகளுக்கு(16) வல்லங்களை குளோபல் வன் ஸ்ரீலங்கா (Global One -SriLanka) நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. ஜேர்மன் தூதரகத்தினால் நிதியளிக்கப்பட்ட”வாழ்க்கை மாற்றத்திற்கான வாழ்வாதாரம்: கரையோர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான மானியம்” எனும் இத்திட்டமானது ஏழை மற்றும் பின்தங்கிய கரையோர சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், வருமானம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதற்கான வாழ்வாதார உதவி வழங்குதலை நோக்காக கொண்டமைந்துள்ளது. விநியோக நிகழ்வின் போது Global One -SriLanka பணிப்பாளர் திரு. முகம்மது அன்சாரி, குச்சவெளி பிரதேச செயலக உதவித்திட்ட பணிப்பாளர் திரு. முகம்மது நாசிக், திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. வ. இம்ஜத் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும் குளோபல் ஒன் ஸ்ரீலங்கா பணிப்பாளர் உரையாற்றுகையில்:- இப் பிரதேசத்தில் உள்ள இவர்களை நிலையான மற்றும் பெறுமதி…

Read More

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ரே தலைமையிலான உயர்மட்ட குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இடம் (14) பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதில் மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண சுற்றுலாப் பணியக தவிசாளர் ஏ.பி.மதனவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Read More

யாழ்ப்பாணம் – புலோலி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை கப்பல் கட்டுமானத்துறை அதிகாரிகளின் நிதி உதவியில் பாடசாலை உபகரணங்கள் வழங்கலும், திருத்தி மீளமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா கையளிப்பு நிகழ்வும் நேற்று காலை 10:45 மணியளவில் பாடசாலை அதிபர் முருகேசு விஜயகுமார் தலமையில் இடம்பெற்றது. விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பாடசாலை வளாகம் வரை மேற்கத்தேய இசை முழங்க அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆம்பமாகின. இதில் விருந்தினர்களாக 521 வது படைப்பிரிவு தளபதி கேணல் ரூவான் பெர்ணாந்து, எல்லங்குளம் படை முகாம் கட்டளை அதிகாரி மேஜர் பனங்கம, கொழும்பு துறைமுக கப்பல் கட்டுமானத்தள பிரதம பொறியியலாளர் M.A.குணசிங்க, கொழும்பு கப்பல் கட்டுமானத்தள இணைப்பு அதிகாரி H.A.மெண்டிஸ், ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்துடன் சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், இராணுவத்தினர் என பலரும் கலநது…

Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 1299 குடும்பங்களைச் சேர்ந்த 4096 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் 3 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும், கரைச்சி – கண்டாவளை பகுதிகளிலேயே பாதிப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அந்தவகையில், மாயவனூர் பகுதியில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 32பேரும், மலயாளபுரம் பகுதியில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேரும், செல்வாநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 13பேரும், இரத்தினபுரம் பகுதியில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 405பேரும், ஜேந்திநகரில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 57 பேரும், ஆனந்தபுரம் பகுதியில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 187பேரும், மருதநகர் பகுதியில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரும், மாவடியம்மன் பகுதியில் 53 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேரும், ஆனைவிழுந்தான் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரும்,…

Read More

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் 131 குடும்பங்களை சேர்ந்த 438 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் யாழ்ப்பாணம் A-32 வீதியில் காணப்படுகின்ற பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக தேவன்பிட்டி கிராமத்திற்கு நீர் உட்புகுந்து உள்ளது. இதன் காரணமாக இடம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவினை மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றனர். மேலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றமையினால் மாவட்டத்தில் பெரும்பாலான தாழ் நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே. திலீபன் தெரிவித்துள்ளதுடன் பாலியாறு, பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும்…

Read More

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான சுவிஸ்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்க நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு வருகை தந்த குழுவினர்கள் நேற்று நல்லூர் நல்லை ஆதீன குரு முதல்வர் இல்லத்தில் குரு முதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

Read More

முல்லைத்தீவு மாவட்டம் சார்பாக பங்குகொண்டு தேசிய மாகாண மட்டத்திலான போட்டிகளில் சாதனைகள் புரிந்த புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவின் வீரர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அவர்களை பயிற்றுவித்த பயிற்றுனருக்கான கெளரவம் அளிக்கும் நிகழ்வுகள் மிகவும் சிறப்புற நடைபெற்றன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலுள்ள மாநாட்டு மண்டபத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் கௌரவிப்பு நிகழ்வானது நேற்று (16.12.2023) இடம்பெற்றுள்ளது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதேச செயலாளர் சி. ஜெயகாந்த், சிறப்பு விருந்தினராக பிரதேச செயலக கணக்காளர் க. கடம்பசோதி அவர்களும் கலந்து சிறப்பித்து சாதனையாளர்களையும் அவர்களின் பயிற்றுனர்களையும் கெளரவமளித்தனர். இந் நிகழ்வில் சாதனை விளையாட்டு வீரர்கள் அவர்களின் பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

Read More

அனைத்து குளங்களும் வான் பாய்வதால் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஆபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் கிராம சேவையாளரின் உதவியுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்று (17.12.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தற்போது நிலவி வருகின்ற மழையுடன் கூடிய கால நிலையானது எதிர்வரும் 20ஆம் தேதி வரை தொடரக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன், இன்னும் ஒரு குறைந்த காற்றழுத்தம் ஒன்று எதிர்வரும் 24ஆம் திகதி அளவில் உருவாகி அதன் மூலமும் மழைவீழ்ச்சி வடக்கு மாகாணத்துக்கு அதிக அளவு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றது. இவ்வாறு கிடைக்கின்ற மழை வீழ்ச்சியானது மிக கனதியாக குறுகிய நேரத்தில் கிடைப்பதனால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வீதிகள் தாழ்வான இடங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதுடன் இந்நீர் வழிந்து ஓட முடியாத நிலைமையையும் காணப்படுகின்றது. அத்தோடு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்ந்து கொண்டிருக்கின்றன. …

Read More