Author: Kalai

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி டிசம்பர் 23ம் திகதி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில்…

Read More

கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “கொழும்பில் உள்ள 26 தோட்டங்களில் 61,000க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இம்மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான புதிய யோசனை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் குறித்த மக்களை குடியமர்த்திய பின்னர் எஞ்சியுள்ள இடங்களை முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், “நான் யாரிடமும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அவ்வாறு கோரிக்கை வைத்தால் அதை நடைமுறைப்படுத்துவேன். அண்மையில் என்னுடன் சில ஊடகவியலாளர்கள் வந்து உரையாடினார்கள். பல்வேறுபட்ட கேள்விகளை கேட்டார்கள் நான் பதிலளித்திருந்தேன். அப்போது தான் அவர்கள் தமிழ் மக்கள் சார்பில் யாராவது ஒருவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக கூறியிருந்தனர். அத்துடன் என்னைக் களமிறங்குமாறு ஏனைய கட்சிகள் கேட்டால் எனது நிலைப்பாடு குறித்தும் கேட்டார்கள். அதற்குத்தான் நான் அனைத்துக் கட்சியினரும் என்னை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு கூறினால் நான் அதை செயற்படுத்துவேன் என கூறினேன். தவிர எந்த சந்தர்ப்பத்திலும்…

Read More

வல்வெட்டித்துறை பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர் மன்னாரைச் சேர்ந்த 2 பேர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேர் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறையில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும் 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது. களவில் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர் 19 வயதான போதைக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது. போதைக்கு அடிமையான திருட்டில் ஈடுபட்ட ஒருவர், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்தவர்கள் என பெண் உள்ளிட்ட எழு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read More

விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். முனியப்பர் கோவில் வீதி, கட்டுவன் மேற்கு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரம் மயூரன் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் முச்சக்கர வண்டி சாரதியாக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் (24) இரவு முச்சக்கர வண்டியில் செல்லும்போது குப்பிழானில் விபத்து சம்பவித்தது. இதனால் அவர் முச்சக்கர வண்டியை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு முன்னால் உள்ள புளியமரத்தில் சடலமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ReplyForwardYou can’t react with an emoji to this message

Read More

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்தரிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் தற்போதைய சூழ்நிலையில் 2024 ம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியை தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது அப்படி நடந்தால் கூட நான்கு பிரதான கட்சிகளிலும் முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும் அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவரினால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் அவ்வாறு இருக்கும்போது ரணில் விக்கிரமசிங்க மீண்டும்…

Read More

மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே இன்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Read More

இன்றையதினம் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராசாவின் தோட்ட வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 416 கால் போத்தல் (104 முழு போத்தல்கள்) சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக இவ்வாறு பதுக்கி வைத்திருந்தபோது குறித்த சாராய போத்தல்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் பரிசோதகரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா போக்குவரத்து பொலிசார் இன்று (26.12) விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், போதைப் பாவனையை தடுக்கும் வகையிலும் வவுனியா போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இதன்போது, 10 சாரதிகளுக்கு எதிராக தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், ஒரு சாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கமைய போக்குவரத்து பொலிஸாரினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது. குறித்த சோதனை நடவடிக்கையில் தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பியமை, முச்சக்கரவண்டிக்கு அதிகளவான அலங்காரம், தலைக்கவசத்தினுள் தொலைபேசி வைத்திருந்தமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு தண்டம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆழிப்பேரலையின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் புதுக்குடியிருப்பில் சிறப்பாக இடம்பெற்றது கடந்த 2004.12.26 அன்று இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த உறவுகளின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று பல்வேறு இடங்களில் அனுஸ்ரிக்கப்படுகிறது அந்தவகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஓரத்திலே புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைந்திருக்கின்ற சுனாமி நினைவாலய வளாகத்தில் இன்று(26) காலை 8 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது சுனாமியில் தங்களது உறவுகளை இழந்த உறவுகளால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகளுக்காக சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானவர்கள் கலந்து…

Read More